இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arjun Muraleedharan Madathiparambilஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 66:
சீனப் போரின் போது, இந்தியப் பொதுவுடைமைவாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய அரசை ஆதரித்தனர், மற்றோர் பிரிவினர் இது சமதர்ம நாட்டிற்கும் [[முதலாளித்துவம்|முதலாளித்துவ]] நாட்டிற்குமான போர் என வாதிட்டனர். இந்தக் கருத்தியல் ரீதியான வேற்றுமை, கட்சித் திட்டம், அதன் செயல்பாட்டு முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் தற்போதைய நிலைமை ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த ரீதியான இந்த கருத்தியல் வேற்றுமை சர்வதேச அளவில் சீனா மற்றும் சோவியத் அணி என இரு கூறாக பிளவுபட்டு [[வலதுசாரி]]கள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான அரசுடன் கைகோர்க்கும் யோசனையை முன்வைத்தனர். இதை [[இடதுசாரி]]கள் என்று சாற்றுரைக்கப்பட்டவர்கள் சி.பி.எம் என பின்னால் பிரிந்தவர்கள் திருத்தியமைக்கப்பட்ட வர்க்க கூட்டணி என்றனர். இந்த தத்துவார்த்த வேற்றுமை தீவிரமடைந்து, சர்வதேச ரீதியிலான சோவியத் சீனா பிரிவுடன் சேர்ந்து [[சிபிஎம்]] என புது கட்சியானது.
 
நுற்றுக்கணக்கான பொதுவுடைமைத் தலைவர்கள் சீன ஆதரவு நிலைக்காக சிறையிலிடப்பட்டனர். சில தேசியவாதிகள் தங்கள் கருத்தை கட்சிக் கூட்டத்தில் வெளிபடுத்தியதற்காகவும் கட்சியின் நிலை சீனாவுக்கு ஆதரவு என பேசியவர்கள் சிறையிலிடப்பட்டனர். ஆயிரக்கணக்கான பொதுவுடைமைவாதிகள் தடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர். சோவியத் தலைமையை ஏற்ற பொதுவுடைமைவாதிகளும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கட்சியில் தனது ஆதிகாரத்தை செலுத்த முற்பட்டனர். 1962இல் பொதுவுடைமைக் கட்சியில் பொது செயலாளர் அஜய் கோஷ் மரணமடைந்தார். அவர் இறப்புக்குப் பின், [[எஸ். ஏ. டாங்கே]] தலைவராகவும் [[ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட்]] பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இது சமாதானத்திற்கான ஒரு முயற்சி. எஸ்.. டாங்கே [[வலதுசாரி]]கள் காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளையும், ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் [[இடதுசாரி]]கள் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
 
1964ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் நடந்த சி.பி.ஐ இன் தேசிய மாநாட்டில் இருந்து, டாங்கே மற்றும் அவரது ஆதரவு [[வலதுசாரி|வலதுசாரிகளின்]], காங்கிரஸ் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராகவும் மற்றும் பொதுவுடைமைக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்தும் 32 மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
வரிசை 72:
இடதுசாரிகளான அந்த 32 மன்ற உறுப்பினர்களும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெனாலியில் ஜூலை 7 முதல் 11 வரை ஒரு மாநாட்டை நடத்தினர். அந்த மாநாட்டில் உட்கட்சி பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தனர். இந்த மாநாட்டில் 1 இலட்சம் பொதுவுடைமைவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 146 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் சிபிஐயின் 7ஆவது (கட்சி காங்கிரஸ்) தேசிய மாநாட்டை கல்கத்தாவில் அதே வருடத்தில் கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
 
தெனாலி மாநாட்டில், [[எஸ். ஏ. டாங்கே]] நடத்திய மாநாட்டிலிருந்து வித்தியாசப்படுத்த சீனப் பொதுவுடைமைத் தலைவர் மாவோவின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
 
தெனாலி மாநாட்டில், பொதுவுடைமைக் கட்சியின் ஒரு பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மேற்கு வங்கத்தைச் சார்ந்த இடதுசாரி சீன ஆதரவுக் குழுவினர், தங்களுடைய சொந்த வரைவு திட்டத்தை வைத்தனர். அவர்கள் எம். பசவபுன்னையா தயாரித்த வரைவுத் திட்டம், வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிப்பதாகவும், சீனா மற்றும் சோவியத் இடையேயான தத்துவார்த்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாடை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
வரிசை 78:
தெனாலி மாநாட்டிற்குப் பிறகு சிபிஐயின் இடதுசாரிகள் மாநில மற்றும் மாவட்ட வாரியான கலந்தாய்வை நடத்தினர். மேற்கு வங்கத்தில் நடந்த சில கூட்டங்கள், மிதவாதிகளுக்கும் தீவிரமானவர்களும் இடையே நடந்த உரசல்களினால் போர்க்களமானது. கல்கத்தாவின் மாவட்டக் கலந்தாய்வில் பரிமள் தாஸ் குப்தா (தீவிர இடதுசாரிகளில் முக்கியமானவர்) ஒரு மாற்று வரைவுத் திட்டதை முன்வைத்தார். மற்றொரு மாற்றுத் திட்டத்தை ஆசிசுல் ஹாக் கல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் முன்வைத்தார், ஆனால் முதலில் ஹாக் முன்மொழிவதை கலந்தாய்வின் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர். கல்கத்தா மாவட்டக் கலந்தாய்வில் 42 உறுப்பினர்கள் எம். பாசவபுன்னையாவின் அதிகாரப்பூர்வ வரைவுத் திட்டத்தை எதிர்த்தனர்.
 
சில்குரிசிலிகுரி மாவட்டக் கலந்தாய்வில், கட்சித் திட்டத்தின் முக்கிய வரைவு முன்மொழிவு ஏற்கப்பட்டு சில கூடுதல் அம்சங்கள் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தீவிர இடதுசாரியான சாரு மஜுன்தாரால் சேர்க்கப்பட்டது. இருப்பினும், ஹரிகிருஷ்ண கோனார் (இடதுசாரி தலைவர்களின் பிரதிநிதி) மாசேதுங் வாழ்க என்ற கோஷத்தை கலந்தாய்வில் தவிர்த்தார். பரிமள் தாஸ் குப்தாவின் ஆவணம் மேற்கு வங்கத்தில் நடந்த இடதுசாரி மாநிலக் கலந்தாய்வில் முன்வைக்கப்பட்டது. குப்தா மற்றும் சிலர் 1951இல் சிபிஐ மாநாட்டில் முன்மொழியப்பட்ட வர்க்க ஆய்வை அமல்படுத்த வலியுறுத்தினர். அவருடைய கோரிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
 
கல்கத்தா மாநாடு அக்டோபர் 31 முதல் நவம்பர் 7 வரை தெற்கு கல்கத்தாவில் உள்ள தியாகராஜா அரங்கத்தில் நடந்தது. அதே வேளையில் டாங்கே பிரிவினர் சிபிஐயின் கட்சி மாநாட்டை பம்பாயில் நடத்தினர். இதனால் சிபிஐ இரண்டு கட்சிகளாகப் பிரிந்தது.<ref>[https://www.bbc.com/tamil/india-57722791 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சீனப் போரால் பிரிந்தது ஏன்?]</ref> கல்கத்தாவில் கூடிய பிரிவு டாங்கே பிரிவினரிடம் இருந்து தன்னை வேறுபடுத்த “'''இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)'''” என பெயரிட்டுக் கொண்டது. சிபிஎம் தன் சொந்தக் கட்சித் திட்டத்தையும் அமைத்துக் கொண்டனர். பி. சுந்தரையா கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <br />மொத்தத்தில் கல்கத்தா மாநாட்டில் 422 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 1,04,421 உறுப்பினர்களை, அதாவது 60 சத சிபிஐயின் உறுப்பினர்களை பிரதிநிதிதுவபடுத்துவதாக கூறினர்.
 
கல்கத்தா மாநாட்டில் கட்சி இந்தியச் சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்தியப் பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது. பரிமள் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளைப்போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.