கல்பதுக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
video added #WPWP
வரிசை 1:
[[File:Drizzlecombe kist 4.JPG|thumb|இங்கிலாந்தில் உள்ள ஒரு கற்பதுக்கை.]][[Image:Cista.jpg|thumb|ஒரு கற்பதுக்கை]]
[[File:Rebala kivikalmed 2021.ogv|thumb|வடக்கு எஸ்டோனியாவில் வெண்கல வயது கல் சிஸ்ட் கல்லறைகள்]]
'''கல்பதுக்கை''' (''cist'', அல்லது ''kist'') என்பது [[பெருங்கற்காலம்|பெருங்கற்காலத்தில்]] இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்றாகும்.<ref>கிருஷ்ணமூர்த்தி, ச., 2004. பக். 34.</ref> கற்பதுக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் பல நாடுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டதுக்கான சான்றுகள் காண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக, இது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான கல்லால் அமைக்கப்பட்ட சிறிய பெட்டிபோன்ற அமைப்பு எனப்படுகிறது. தென்னிந்தியாவிலும் பல கற்பதுக்கைகளைக் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியாவில் காணப்படும் பிற்காலத்துக் கற்பதுக்கைகள் கூடிய சிக்கல்தன்மை கொண்டவை. இவை நிலத்தில் குழி தோண்டி அதனை அறைகளாகப் பிரித்து உருவாக்கப்படும் ஒரு அமைப்புக் கொண்டவை.<ref>பவுன்துரை, இராசு., 2004. பக். 77</ref> இயற்கையாகக் காணப்படும் பெரிய [[கல்|கற்களைக்]] கொண்டு அமைக்கப்படும் [[கல்திட்டை]]கள் போலன்றி, முறையாக வேண்டிய அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைப் பயன்படுத்தியே இவ்வாறான கல்பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இவை அவற்றின் அளவுக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள கற்பலகைகளினால் மூடப்படுகின்றன.<ref>பவுன்துரை, இராசு., 2004. பக். 77, 78</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கல்பதுக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது