ரஞ்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 22:
ரஞ்சனின் திரைப்பட வரலாற்றில் [[1948]] இல் வெளிவந்த [[சந்திரலேகா]] ஒரு புதிய ஏற்றத்தைக் கொடுத்தது. கதாநாயகனைவிட வில்லனாக நடித்திருந்த ரஞ்சனே ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். இது வசூலிலும் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. "நிஷான்" என்ற பெயரில் [[இந்தி]]யிலும் இப்படம் வெளிவந்தது. நல்லவனும், கெட்டவனுமாக தமிழில் [[எம். கே. ராதா]] நடித்த வேடங்களை இந்தியில் ரஞ்சன் நடித்திருந்தார். இதையடுத்து ரஞ்சன் அகில இந்தியப் புகழைப் பெற்றார். நிஷானின் வெற்றியைத் தொடர்ந்து [[எஸ். எஸ். வாசன்]] தனது அடுத்த படமான "மங்களா"விலும் ரஞ்சனையே நடிக்க வைத்தார். ரஞ்சனின் [[வாள்வீச்சு (விளையாட்டு)|வாள்வீச்சு]] ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து "ஷின் ஷினாகி பூப்லபூ", "சிந்துபாத்" என்று பல இந்திப் படங்களிலும் நடித்தார்.
 
சந்திரலேகா என்ற மறக்க முடியாத பாத்திரத்தை அதே பெயர்கொண்ட படத்தில் நடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, [[டி. ஆர். ராஜகுமாரி]], சந்திரலேகா என்ற பாத்திரத்தில் [[சாலிவாகனன் (திரைப்படம்)|சாலிவாகனன்]] ([[1945]]) என்ற படத்தில் நடித்தார். படத்தின் நாயகன் சாலிவாகனனாக நடித்தார் ரஞ்சன். ஒரு காதல் பாடலில், [[பந்துவராளி]], [[காம்போதி]], [[கௌளை]], [[சிம்மேந்திரமத்தியமம்]] என்று மாறிமாறிப் பாடிக் கொள்கிறார்கள் ரஞ்சனும் ராஜகுமாரியும்.
 
[[என் மகள்]] [[1954]] இல் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து [[1957]] இல் [[நீலமலைத் திருடன்]] படத்தில் சாகசக் கதாநாயகனாக நடித்தார். [[அஞ்சலி தேவி]] இவருடன் இணைந்து நடித்தார். ''சத்தியமே லட்சியமாய் கொள்ளடா'' ([[டி. எம். சௌந்தரராஜன்]] பாடல்) என்ற பாடலை குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.
"https://ta.wikipedia.org/wiki/ரஞ்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது