பண்டத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,075 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வேறு சிலர் பாண்டியர்களின் இலங்கை மீதான படையெடுப்பின்போது பாண்டியரின் படைகள் தரித்துச்செல்லும் இடமாக இருந்ததினால் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு என மருவியதாகவும் சில கர்ணபரம்பரை கதைகள் கூறுகின்றன.
 
இவ்வாறு பன்னெடுங்காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொரு கிராமங்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு திகழ்ந்து வந்துள்ளமையின் தொடர்ச்சியை இலங்கை மீதான அல்லது யாழ்ப்பாணத்தின் மீதான அந்நியராட்சி கால பகுதிகளிலும் இனங்காணக்கூடியதாக உள்ளது.
1616இல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பின் தமது நிர்வாக வசதிக்காக வலிகாமம்,தென்மராட்சி,வடமராட்சி,
தீவகம் என இருந்த யாழ்ப்பாணபகுதிகளை 32 கோயிற்பற்றுக்களாக பிரித்தனார் அதில் வலிகாமம் பகுதியில் பிரிக்கப்பட்ட 14 கோயிற்பற்றுக்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு கிராமம் விளங்கியதுடன் பண்டத்தரிப்பு கோயிற் பற்று என்பது பிரான்பற்று,வடலியடைப்பு,சில்லாலை,மாதகல்,பெரியவிளான்,சிறுவிளான்,
மாரீசங்கூடல்,இளவாலை, பனிப்புலம் ஆகிய பலகிராமங்களை குறிப்பதாக இருந்ததினால் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை அக்கிராமங்களின் பிரதேசரீதியான பெயராக பண்டத்தரிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்ற தன்மையினை இனங்காணமுடிகிறது.
போர்த்துக்கேயர் தேவாலயம் ஒன்றை அமைத்து அதனை அண்டிய ஒரு வணிக மைய வளாகத்துடன் வணிக மையமாக பண்டத்தரிப்பு விளங்கியது இத்தகு தன்மை பின் வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்தது.
ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த மறைப்பரப்பாளரும் வைத்தியருமான ஜோன் ஸ்கூட்டர்
(DR. John Scudder ) தெற்க்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்க்கத்தேய மருந்தகத்தினை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் . அது மட்டுமல்லாமல் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடிய மகளீர் கல்லூரி யாக பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியும் அமைக்கப்பட்டது.
 
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3200376" இருந்து மீள்விக்கப்பட்டது