பேச்சு:சைவ சித்தாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்திட்டம் சைவம்
வரிசை 35:
 
இட்டவர்: --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 19:44, 11 ஆகஸ்ட் 2007 (UTC)
 
== "சைவசித்தாந்தமும் அதன் சமூக நிலைப்பாடுகளும்" என்னும் தலைப்புப் பற்றிய கருத்து ==
 
“சைவ சித்தாந்தம் சாதியமைப்பைப் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு, அதனை வலியுறுத்துகின்றது” என்று குறிப்பிடப்பட்டு அதற்கு ஒரு நூல் உசாத்துணையாகக் காட்டப்பட்டுள்ளது. நூற்தலைப்பும் தெரியவில்லை. அந்த இணைப்பும் செயலற்று உள்ளது. சைவ சித்தாந்தம் சாதியமைப்பை ஏற்றுக்கொண்டு வலியுறுத்துகிறது என்று குறிப்பிடுவதற்குரிய மூலம் 14 சித்தாந்த சாத்திரங்களிலுள்ள ஏதேனுமொரு பாடலாக இருத்தல் வேண்டுமேயல்லாமல் இரண்டாந்தர மூலமாக இருத்தல் கூடாது.
இந்து சமயத்தின் ஏனைய பிரிவுகளின் செல்வாக்கினால் வருணாச்சிரம தருமமும் அதனால் ஏற்பட்ட சாதிய அமைப்பும் சமூகத்தில் இருந்தது உண்மையே. ஆயினும் சைவசித்தாந்தம் வருணாச்சிரம தருமத்தை ஏற்கொண்டதுமில்லை, அதனை ஊக்குவித்ததுமில்லை.
"மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரனெனத் தொழுமே" என்பது சிவஞானபோதம். சைவசித்தாந்தம் ஆகமங்களையும் திருமுறைகளையும் ஆதாரமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. திருமுறைகளில் அக்கால சமூகத்தில் நிலவிய சாதிய அமைப்பினைத் தள்ளி பக்கதியை வளர்க்கும் ஆதரங்களே உள்ளனவன்றி அங்கு சாதியத்தை ஊக்குவிக்கும் கருத்துக்கள் இல்லை. உதாரணமாக மேல்வரும் அப்பர் சுவாமிகளது பாடலைக் குறிப்பிடலாம்.
“சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே"
பெரியபுராணத்திலும் பலவிதமான சமூகத்தைச் சேர்ந்தவர்கயும் நாயன்மார்களாக இருப்பதைக் காணலாம். ஆகவே சைவசித்தாந்தம் சாதியமைப்பை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்கிறது என்பது ஆதாரமற்றது. ஆதாரமிருப்பின் அதற்குரிய சிந்தாந்த நூலில் உள்ள பாடலைக் குறிப்பிடவும். ஆதாரம் சித்தாந்த நூல்களில் பெறமுடியாவிடின் இக்கருத்தை நீக்கிவிடவும்.
--[[பயனர்:Santharooban|Santharooban]] ([[பயனர் பேச்சு:Santharooban|பேச்சு]]) 04:06, 24 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சைவ_சித்தாந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சைவ சித்தாந்தம்" page.