திவாகர நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Divakara Nikandu.jpg|thumb|250px|right|[[திவாகர முனிவர்]] அருளிய சேந்தன் திவாகர நிகண்டு]]
 
'''திவாகர நிகண்டு''' என்னும் [[நிகண்டு]] நூல் [[கிபி]] [[8ம் நூற்றாண்டு|6 -ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்ற [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது.<ref>https://books.google.co.in/books?id=RAVuAAAAMAAJ&q=divakaram&dq=divakaram&lr=&cd=12&redir_esc=y</ref> இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அதுஅஃது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களேகருத்துகளே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref> இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது.
 
இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. [[தமிழ்|தமிழில்]] இன்றுள்ள [[நிகண்டு]]களில் இதுவே காலத்தால் முந்தியது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm 5.4.1 திவாகர நிகண்டு]</ref>
வரிசை 7:
{{dablink|சேந்தன் திவாகர நூலின் இரண்டு பகுதிகள் விரிவாகத் தொகுக்கப்பட்டு [[சொல் (பொருள், நிகண்டு-வழி)]] தொகுப்புப் பக்கத்தில் சுட்டப்பபட்டுத் தனித்தனி இரண்டு கட்டுரைகளாகத் தரப்பட்டுள்ளன.}}
 
இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. கே. எஸ். ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரிப்வையாபுரி பிள்ளையும் இப்பாட்டுக்களில்இப்பாட்டுகளில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர்பின்னர்த் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள்இந்தப்பாட்டுகள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை.
 
இந்த நிகண்டினை இயற்றியவர் ‘சைவன்‘ என ஒருசாராரும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ‘ஜைனன்‘ எனவும் கூறுவர். பேராசிரியர் வையாபுரி பிள்ளை இது பற்றித் தனது "History of Tamil Language and Literature" என்ற நூலின் பக்கம் - 164இல்164-இல் "The earliest Nighandu (lexicon) in Tamil, Divakaram, is a Jain work. Forgetting this, Saivaite scribes and editors have placed Siva's name at the beginning of the first section in contravention of Jain practice" எனக் கூறியுள்ளார்.
 
‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்ட மிகுதி இரண்டு மூலத்தையும் இணைத்து, 1923ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், அது 1958ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/திவாகர_நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது