பாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by 42.106.177.195 (talk) to last version by Almighty34: reverting vandalism
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:பாரி முல்லைக்குத் தேரீதல் (படிமம்).JPG|thumb|பறம்பு மலையில் காணப்படும் பாரி முல்லைக்குத் தேரீயும் சிலை வடிவக் காட்சி.]]
'''வேள்பாரி''' [[பறம்பு மலை]]யை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் ஆவார். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]]க் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தின் எவ்வி குடியில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது [[பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில்|'பிரான்மலை]]' என்று அழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் [[பாண்டியர்|பாண்டிய]] அரசின் எல்லைப் பகுதியாகச் சுட்டப் பெற்றது பறம்புமலை ஆகும். பக்தி இலக்கியக் காலத்தில்.இம்மலை 'கொடுங்குன்றம்' என்று வழங்கப்பட்டது.. பிரான்மலை [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] [[திருப்பத்தூர்]], [[காரைக்குடி]] திருப்பத்தூர் வட்டத்தில் சிவகங்கை ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை என்னும் ஊரின் அருகில் உள்ளது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
வரி 10 ⟶ 9:
வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழுகொம்பின்றித் தவித்த [[முல்லை மலர்|முல்லைக்கொடிக்குத்]] தான் ஏறி வந்த [[தேர்|தேரினையே]] ஈந்த புகழ்ச்செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலைசிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ்பெற்ற [[சுந்தரர்]] -'திருத்தொண்டத்தொகை' என்ற புகழ்பெற்ற பதிகத்தைப் பாடியவர் - பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் [[புறநானூறு]] என்னும் சங்கத்தொகை நூலுள் பல உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:கடையெழு வள்ளல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது