விக்கிப்பீடியா பேச்சு:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
என் பரிந்துரைகள்
வரிசை 1:
''பயனர்கள் தமது தொலைநோக்கை, 2009 ஆண்டுக்கான வேலைத்திட்டத்தை பரிந்துரைக்க அன்புடன் அழைக்கப்படுகின்றனர். அப்போது பின்வரும் கேள்விகளை கவனத்தில் கொள்ளுத்ல்கொள்ளுதல் நன்று.''
* தமிழ் விக்கிப்பீடியாவில் 2009 ஆண்டில் விரிபுவிரிவு பெறவேண்டிய முக்கிய மூன்று துறைகள்?
**செல்வாவின் பரிந்துரைகள்:
::(1) [[விக்கிப்பீடியா பேச்சு:2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2007 Tamil Wikipedia Annual Review#செல்வாவின்_கருத்துக்கள்]] பக்கம் பார்க்கவும்.
::(2) நான் 2007 இல் கூறிய அதே கருத்தை மீண்டும் வலியுறுத்த வேண்டுகிறேன்:தமிழ் விக்கியில் நாம் ஊன்றி கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இப்பொழுது 10-12 ஆவது வகுப்பில் தமிழில் பயிலும் மாணவர்கள் (தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), தங்கள் பாடநூல்களில் உள்ள கருத்துக்களுக்கு '''விரிவு தருமாறு''' நம் கட்டுரைகள் இருத்தல் வேண்டும். பாடநூல்களில் உள்ள குறிப்புகள் தவிர மேற்கொண்டு அறிய ஏதும் செய்திகள் (குறிப்பாக அறிவியல் துறைகளில்) தமிழில் இல்லாததாலோ அல்லது மிகமிகக் குறைவாகவே கிடைப்பதாலோ (பொது நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றில்), தமிழ் விக்கிப்பீடியாவில் ஓரளவிற்கேனும் தர முயலவேண்டும். '''தலையாய பொறுப்புகளில்''' ஒன்றாக இதனை நான் கருதுகின்றேன்.
::(3)அறிவியல், தொழில்நுட்பம், உயிரினங்கள் பற்றி நிறைய எழுதவேண்டும். 5400+ பாலூட்டிகளில் ஒரு 600 ஆவது இருத்தல் வேண்டும், 9600 உக்கும் மேற்பட்ட பறவைகளில் ஒரு 500 பறவைகள் பற்றியாவது இருத்தல் வேண்டும். உள்ள ஏறத்தாழ 27 பறவை வரிசைகளில் ஒவ்வொரு வரிசையிலும் இரண்டொன்றாவது இருத்தல் வேண்டும், தயிர்கடையும் பூச்சியில் 2,000 வகைகள் உள்ளன, தும்பி/தட்டாரைப் பூச்சியில் 5,000 வகைகள் உள்ளன, வெட்டுக்கிளியில் 20,000 வகைகள் உள்ளன, வண்டு இனத்தில் 360,000 வகைகள் உள்ளன, ஈ உண்ணி, எறும்பு, குளவி வகைகள் 230,000 இனங்கள் உள்ளன, பட்டாம்பூச்சியில் 170,000 வகைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு 50-100 கட்டுரைகளாவது இருத்தல் வேண்டும். அணு, தொலைக்காட்சி, தொலைபேசி, கணினி போன்ற அடிப்படையான கட்டுரைகள் இன்னும் பல மடங்கு நன்றாக விரிவாக, அழகாக இருத்தல் வேண்டும். பல கட்டுரைகள் இன்னும் எழுதப்படவில்லை. இயற்பியல் (ஒளியியல், வெப்பவியல், ஒலியியல், மின் காந்தவியல்..), வேதியியல் அடிப்படைக் கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் இல்லாமல் இருக்கின்றன. இது போல் இன்னமும் பல உள்ளன. இரண்டொருநாளில் சுருக்கி வரிசைப்படுத்துகிறேன்.
* தமிழ் விக்கிப்பீடியாவை சந்தைப்படுத்த முன்னெடுக்கவேண்டிய மூன்று நடவடிக்கைகள்?
::செல்வாவின் பரிந்துரைகள்:
::நாளிதழ், கிழைமை ஏடுகள், மாதிகைகளில் கட்டுரைகள் எழுதுதல். தொலைக்காட்சி, வானொலி, இணையத்தில் பேசுதல், எழுதுதல். நண்பர்களை நேரடியாக வேண்டி ஈடுபடுத்துதல், நூல்கள் எழுதுதல், பட்டறைகள் நடத்துதல். நாம் எழுதும் கட்டுரைகள் அழகாகவும், நேர்த்தியாகவும், அறிவைத்தூண்டும் விதமாகவும் இருப்பதே ஒரு சந்தையேற்ற, சந்தையில் செல்லுபடியாகும் கூறு என்று கூறலாம். கண்ணைக் கவரும் அருமையான படங்கள், நேர்த்தியான கட்டமைப்பு, கட்டுரை நடையின் ஒழுங்கு, கருத்துகளின் துல்லியம், எழுத்து, சொற்றொடர் பிழைகள் இல்லாமல் இருத்தல், தகுந்த சான்றுகோள்களுடன் இருத்தல் போன்றவை தன்னொளிர்வுதரும் சந்தையில் தேறும் கூறுகள்.
 
--[[பயனர்:செல்வா|செல்வா]] 05:03, 24 டிசம்பர் 2008 (UTC)
<hr>
Return to the project page "2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review".