சோழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 130:
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் [[பல்லவர்]]களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த [[பாண்டியர்]]களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.[[பழையாறை]]யில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த [[முத்தரையர்]]களைத் தோற்கடித்துத் [[தஞ்சாவூர்|தஞ்சையைக்]] கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். [[பாண்டியர்]]களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை ஆற்றின்]] தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.
 
=== முதலாம் ஆதித்த சோழன் (கிபொ.பியு.871-907 ) ===
விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் [[பல்லவர்|பல்லவன்]] அபராசிதனுக்கும் இடையே [[திருப்புறம்பியம்]] என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு [[பாண்டியர்|பாண்டியன்]] வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். [[திருப்புறம்பியப் போர்]] சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற [[பாண்டியர்]]கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். [[பல்லவர்]] மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் [[மேலைக் கங்கர்|கங்கர்]] நாட்டிலும், [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலும்]] பரவியிருந்தது. [[சேர நாடு|சேர நாட்டுடனும்]], இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/சோழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது