உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 187:
 
::::மற்றும் என்பதன் பயன்பாட்டுக்குச் சரியான இலக்கண ஆதாரத்தைத் தருகிறீர்களா? அவர்கள் அவன் மற்றும் அவளை அழைத்தனர் என்று கூறினால் இலக்கணப்படி சரியா? மன்னன் மந்திரி மற்றும் தளபதியை அழைத்தான் என்றெழுதுவது இலக்கணப்படி சரியா?--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 17:07, 29 சூலை 2021 (UTC)
 
வாழ்க தமிழ்...,
வாழ்க வளமுடன்.
 
வணக்கம்.
 
அவர்கள், அவன் மற்றும் அவளை அழைத்தனர்.
 
*******
(அவர்கள், அவனையும் அவளையும் அழைத்தனர். )
(மன்னன், தளபதியையும் மந்திரியையும் அழைத்தான்.)
 
என்று எழுதுவதே மிகச்சரியான இலக்கணப் பதமாகும்.
 
நான் மேலே குறிப்பிட்ட சொற்றொடரைச் சுவரில் ஒருவன் எழுதிக் கொண்டு இருக்கிறான். அதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
 
மன்னன் -
 
எழுதும்போது பொருள் புரிகிறது. (பொருள் மயக்கம் இல்லை).
 
மன்னன் தளபதியையும்-
 
இரண்டாவது சொல்லை எழுதும்போதும் உங்களுக்குப் பொருள் புரியும். (இந்த இடத்தும் பொருள்மயக்கம் இல்லை. ஆனால், சொற்றொடர் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பது உங்களுக்கு புரியும்-இரண்டாம் வேற்றுமை பொருண்மைகள் ஏதோ வினைமுற்றாக வரும் என்பதையும் கூடுதலாக அறிந்துவிட இயலும்-சொல்லின் வினைமுற்று அறிய முயலும் என்றால் எத்தனை சிறப்பு)
 
மன்னன் தளபதியையும் மந்திரியையும்
 
-சொற்றொடர் தெளிவாக இருக்கின்றது. உங்களுக்குப் பொருள்மயக்கமும் வரவில்லை. இன்னும் சொற்றொடர் முற்றுப்பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்)
 
மன்னன் தளபதியையும் மந்திரியையும் அழைத்தான்.
 
-சொற்றொடரில் பொருள் முற்றுப்பெற்றது. சொற்றொடரின் பொருள் முழுமையும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
 
ஒருவன் எழுதிக் கொண்டு செல்லும்போது பொருள் மயக்கம் வராது சொற்கள் தொடருமானால் அதுவே நல்ல சொற்றொடர் ஆகும்.
 
அதுபோல நீங்கள் குறிப்பிட்ட சொற்றொடரை நோக்குவோம்.
 
மன்னன், தளபதி -
 
தொடரின் பொருள் புரிகிறது; சொல் தொடர்கிறது. இதுவரை பொருள்மயக்கம் இல்லை.
 
மன்னன் தளபதி மற்றும்-
 
பொருள் புரிகிறது சொற்கள் தொடர்கின்றன. பொருள் மயக்கம் ஏற்படுகிறது. எழுவாய் ஏற்கவிருக்கும் வினைமுற்று குறித்து அறிய முடியவில்லை.
 
மன்னன், தளபதி மற்றும் மந்திரியை
 
பொருள் புரிகிறது; சொற்றொடர் தொடர்கிறது. கடைசியாக வந்த வேற்றுமை உருபு , இறுதியாக என்ன பொருண்மையை உணர்த்தும் வினைமுற்று வரும் (இரண்டாம் வேற்றுமை அல்லாத பிற வேற்றுமைகள் வாரா) என்ற பொருள் மயக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
 
மன்னன், தளபதி மற்றும் மந்திரியை அழைத்தான்.
 
சொற்றொடரின் பொருண்மை முழுமையாகப் புரிகிறது.
 
மேற்குறிப்பிட்ட சொற்றொடர்களில்
 
மன்னன், தளபதியையும் மந்திரியையும் அழைத்தான்.
 
அவர்கள், அவனையும் அவளையும் அழைத்தார்கள்.
 
என்று எழுதுவதே பொருள்மயக்கம் தராத மிகச் சரியான சொற்றொடர் ஆகும்.
 
மேற்கண்ட சொற்றொடர்களுக்கு 100/100 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.
 
அவர்கள், அவன் மற்றும் அவளை அழைத்தனர்.
அண்ணன் தளபதி மற்றும் மந்திரியை அழைத்தான்.
 
மேற்கண்ட சொற்றொடர்களுக்கு 100-ஐத் தவிர அதற்கும் கீழ் உள்ள எவ்வளவு மதிப்பெண் எவ்வளவு வேண்டும் என்றாலும் வழங்கிக் கொள்ளலாம்.
 
வாழ்க தமிழ்,
வாழ்க வளமுடன்.
வாழ்க தமிழ்.
[[பயனர்:பாஸ்கர் துரை|பாஸ்கர் துரை]] ([[பயனர் பேச்சு:பாஸ்கர் துரை|பேச்சு]]) 18:06, 29 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:பாஸ்கர்_துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது