பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
தருஷி: ஹா ஹா... ஆனால் நான் எதிர்பார்க்கவேயில்லை
 
சந்தமினி: ரொம்பவும் தன்னடக்கம் வேண்டாம்! இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் இவ்வளவு பெரிய விடயத்தை சாதிப்பது மிகவும் கடினமான விடயம். உன்னைப் போன்ற கடின உழைப்பாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமான பெறுபேறு. எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.
 
தருஷி: சந்தமினி, தற்போது தான் எல்லா விடயங்களும் எனக்கு சாதகமாகச் செல்வது போல் உள்ளது. என் எல்லா கனவுகளும் ஒரு மயிரிழை தொலைவில் தான் உள்ளது போலுள்ளது. எனது இலட்சியங்களுக்கும் எனக்கும் இடையில் இனி எதுவும் வராது.
 
சந்தமினி: தருஷி, எப்போது பயணம்?
 
தருஷி: வீசா மற்றும் ஏனைய ஆவணங்கள் அடுத்த மாதமளவில் தயாரானவுடன் பயணமாக நினைக்கிறேன்.
 
சந்தமினி: ஆகா.. அது மிகவும் சிறப்பு. ஆனால்....
 
தருஷி: புது நண்பர்களைச் சந்தித்தவுடன் உன்னை மறந்துவிடுவேன் என்று பயந்து விட்டாயா?
 
சந்தமினி: அவ்வளவு இலகுவில் என்னிடம் இருந்து உன்னால் தப்பித்துவிட முடியாது! நான் இந்த ''கொரோனா நிலைமை'' காரணமாக பாதிக்கப்படப்போகும் சர்வதேசப் பயணம் தொடர்பில் தான் பயப்படுகின்றேன்.
 
தருஷி: ஆம். அந்த ''கொரோனா நிலைமை'' பற்றிக் கேள்விப்பட்டேன். நான் நினைக்கின்றேன் அது சரியாகி விடும் என்று...
 
சந்தமினி: நீ செய்தியைப் பார்க்கவில்லையா? அது உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவுகின்றது. அது புதிய வைரஸ் காரணமாகப் பரவும் ஒரு சுவாச நோய். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
 
தருஷி: மன்னிக்க வேண்டும் சந்தமினி. நான் கொஞ்சம் இந்த செய்திகளிடமிருந்து விடுபட்டுச் சென்று விட்டேன். எனக்கு இந்த கொரோனா பற்றியோ, இந்த வைரஸ் பற்றியோ ஒன்றும் தெரியாது. எனக்கு இவற்றைப் பற்றி கொஞ்சம் விபரிக்க இயலுமா?
 
சந்தமினி: சரி.. முதலில் வைரஸுடன் ஆரம்பிப்போம். எங்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு வைரஸ்களால் தான் காரணம் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தடிமன் காய்ச்சல் தொடக்கம் எய்ட்ஸ் வரை வைரஸ்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் வைரஸ்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து சற்று வேறுபட்டவை. அனேகமான உயிரினங்களின் கலங்கள் பிற கலங்களின் உதவியின்றி வாழக்கூடியவை அல்லவா?
 
தருஷி: உண்மையைச் சொல். என்னால் உதவியின்றி ஒரு நாள் கூட தப்பிப்பிழைக்க முடியாது.
 
சந்தமினி: ஹா ஹா... நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் வைரஸ் ஒரு வகை கட்டுப்பட்ட ஒட்டுண்ணி. அதாவது அதனால் ஒரு விருந்துவழங்கி இன்றி இயங்க இயலாது. அத்துடன் ஒரு உயிருள்ள கலத்துள் நுழைந்தால் மட்டுமே அதனால் பெருக முடியும். ஒரு நபர் தொற்றுக்குள்ளானவுடன் அவரது கலங்களைப் பயன்படுத்தி தன்னைப் போன்ற பல பிரதிகளை உருவாக்கச் செய்யும். ஒரு தனி வீரர் ஒரு இராணுவத் தளத்துக்குள் நுழைந்து ஒரு புது படையையே உருவாக்குவது போன்ற நிலை தான் இது. தருஷி, உனக்கு விளங்கிவிட்டது தானே?
 
தருஷி: அப்படித் தான் நினைக்கிறேன். அப்படியென்றால் வைரஸ் என்னைத் தொற்றுகின்றது, பின்னர் தப்பிப்பிழைத்துப் பெருகுவதற்கு எனது கலங்களைப் பயன்படுத்துகின்றது. ஆனால் எப்படி அப்படியொன்றை அதனால் செய்ய முடிகின்றது? எனது கலங்கள் அதற்கெதிராக ஒன்றும் செய்யாமலா இருக்கின்றன?
 
சந்தமினி: ஆம். எதிராக அவை சில வேலைகள் செய்கின்றன தான். ஆனால் இதில் தான் விடயம் கொஞ்சம் சிக்கலாகின்றது. தொற்றை ஏற்படுத்தும் முழுமையான வைரஸ் துணிக்கையை ''வைரியோன்'' எனப்படும். மிகவும் எளிய வைரியோன் நியூக்கிளிக் அமிலம், புரத உறை என இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது. நியூக்கிளிக் அமிலம் RNA அல்லது DNA ஆக இருக்கலாம். அந்தப் புரத உறையின் முக்கிய செய்ற்பாடுகளில் ஒன்று நியூக்கிளிக் அமிலத்தை தொற்றுக்குள்ளான விருந்து வழங்கியிடமிருந்து பாதுகாப்பதாகும்.
 
தருஷி: எனவே உள்ளே இருக்கும் கூறுகளைப் புரத உறை பாதுகாக்கின்றது. அப்படி தானே? அது மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஒரு பாதுகாப்புக் கவசம் போல இல்லையா?
 
சந்தமினி: ஆம். நியூக்கிளிக் அமிலங்களை அழிக்கக்கூடிய நியூக்கிளியேஸ் எனப்படும் சில இரசாயனப் பொருட்களை விருந்து வழங்கி உருவாக்கும். புரத உறை இதைத் தடுக்கும்.
 
தருஷி: மிகவும் சுவாரஷியமாக உள்ளது. அப்படியென்றால் இந்த வைரஸ்கள் எங்கே உள்ளன? அவை எல்லா இடத்திலுமா உள்ளன?
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது