ஜுராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 65:
[[2018]]-ஆம் ஆண்டில் [[வாசிங்டன், டி. சி.|வாசிங்டன், டி. சி.யிலுள்ள]] [[மேலவை (ஐக்கிய அமெரிக்கா)|அமெரிக்க மேலவை]], ஈஸ்லா நுப்லாரில் நிகழவுள்ள எரிமலை வெடிப்பிலிருந்து அங்குள்ள தொன்மாக்களை மீட்பது குறித்து ஆலோசிக்கிறது. பல ஆண்டுகளுக்குமுன் அங்கிருந்த [[ஜுராசிக் பார்க் (திரைப்படம்)|ஜுராசிக் பார்க்]] அழிந்தபோது தப்பிய கணித வல்லுநர் [[இயான் மால்கம்(கதாபாத்திரம்)|இயான் மால்கம்]] சாட்சியமளிக்கையில்'', [[''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்|ஜான் ஹேமன்ட்]] [[படியெடுப்பு|செய்த]] தவறைத் திருத்தவேண்டுமெனில் அவ்விலங்குகளைச் சாகவிடவேண்டும்'' என வலியுறுத்துகிறார்.
 
இதற்கிடையே ''ஜுராசிக் வேர்ல்ட்''-டின் முன்னாள் [[செயன்முறைகள் நிர்வாகம்|செயன்முறை]] மேலாளரான கிளேர் டியரிங், தொன்மாக்களைக் காக்கும் நோக்கில் Dinosaur Protection Group என்ற அமைப்பை நிறுவுகிறார். தொன்மாக்களை மீட்பதற்கு எதிராக தீர்மானம் மேலவையில் தீர்மானம் நிறைவேறுவதைத் தொடர்ந்து, ஹேமன்டின் முன்னாள் கூட்டாளியான [[''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்|பெஞ்சமின் லாக்வுட்]], கிளேரை வடக்கு [[கலிபோர்னியா]]விலுள்ள தன் பண்ணை வீட்டுக்கு வரவழைக்கிறார். லாக்வுட்டும் அவரது உதவியாளர் [[''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்|ஈலை மில்ஸும்]], தொன்மாக்களை ஒரு புதிய தீவுக் காப்பகத்துக்கு மாற்றும் திட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஈஸ்லா நுப்லாரின் விலங்குகளைக் கண்டறியத் தேவையான [[GPS காட்டுயிர் பின்தொடர்வு|பின்தொடர்வுக் கட்டமைப்பை]] மீளியக்க கிளேரின் உதவி தேவைப்படுகிறது. அங்கு எஞ்சியுள்ள ஒரே [[வெலாசிராப்டர்|'''வெலாசிராப்டரான''']] புளூ-வை மீட்கும் பொறுப்பை ''ஜுராசிக் வேர்ல்ட்''-டின் முன்னாள் ராப்டர் பயிற்சியாளரும் தன் முன்னாள் தோழனுமான ஓவன் கிரேடியிடம் கிளேர் ஒப்படைக்கிறார்.
 
இதன்பின் கிளேரும் ''ஜுராசிக் வேர்ல்ட்''-டின் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர் [[''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்|பிராங்க்ளின் வெப்]]-பும் ஈஸ்லா நுப்லாருக்குச் சென்று அதன் கண்காணிப்புக் கட்டமைப்பை மீளியக்குகின்றனர். இவ்வேளையில் [[''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்|கென் வீட்லி]] தலைமையிலான கூலிப்படையோடு இணையும் ஓவனும் தொல்விலங்கு மருத்துவர் [[''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்|ஸியா ரோட்ரிக்ஸும்]] புளூவை மீட்கின்றனர். அப்போது குழுவினருக்குள் ஏற்படும் மோதலில் புளூ சுடப்படுகிறது. வீட்லி ஓவனை மயக்கப்படுத்துகிறார். இவரையும் கிளேர், பிராங்க்ளின் ஆகியோரையும் தீவில் கைவிட்டபின், புளூவிற்கு சிகிச்சையளிக்க ஸியாவைப் பணையக்கைதியாக அழைத்துச் செல்கிறார் வீட்லி. மீட்கப்பட்ட தொன்மாக்களோடு கூலிப்படைக் கப்பல் தலைநிலம் திரும்புகிறது. பிற விலங்குகள் எரிமலை வெடிப்பில் இறக்கின்றன. மயிரிழையில் அக் கப்பலுக்குள் நுழையும் கிளேர், ஓவன், பிராங்க்ளின் ஆகியோர், டி-ரெக்ஸின் குருதியை புளூவுக்கு மாற்றி அதன் உயிரைக் காக்க ஸியாவுக்கு உதவுகின்றனர். மேலும், மீட்கப்பட்ட தொன்மாக்கள் எதற்காகவோ ஒரு இரகசிய இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுவதை உணர்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_வேர்ல்ட்:_ஃபாலன்_கிங்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது