நிலக்கரி அகழ்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 6:
[[கைத்தொழிற் புரட்சி]] 18 ஆம் நூற்றாண்டில் [[இங்கிலாந்து]] நாட்டில் தொடங்கியது. இது பின்னர் [[ஐரோப்பா]]க் கண்டப் பகுதிக்கும், [[வட அமெரிக்கா]]வுக்கும் பரவியது. இந்தப் புரட்சி அதன் அடிப்படையாக விளங்கிய [[நீராவி எந்திரம்|நீராவி எந்திரங்களை]] இயக்குவதற்குத் தேவையான நிலக்கரி கிடைப்பதிலேயே தங்கியிருந்தது. நீராவி எந்திரங்களால் இயங்கிய [[தொடர்வண்டி]]ச் சேவை, [[நீராவிக் கப்பல்]]கள் ஆகியவற்றின் அறிமுகத்துடன் பன்னாட்டு வணிகம் பல மடங்காகியது. இதனால் நிலக்கரியின் தேவையும் கூடியது. 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய நிலக்கரிச் சுரங்கங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆபத்தான வேலை நிலைமைகளில் நீண்ட நேரம் வேலை செய்தனர்.<ref>"[http://www.nationalarchives.gov.uk/education/lesson21.htm 19th Century Mining Disaster]". The National Archives.</ref>
 
சவுத் வேல்சு நிலக்கரிப்புலத்தின் மையப் பகுதியில் காணப்படும் சவுத் வேல்சு பள்ளத்தாக்கில் உள்ள டவர் நிலக்கரிச் சுரங்கமே தொடர்ச்சியாக நீண்டகாலம் இயங்கிய ஆழ் நிலக்கரிச் சுரங்கம் ஆகும். 1805 ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தச் சுரங்கம், 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூடப்பட இருந்தது. அதைத் தவிர்ப்பதற்காக, அதன் தொழிலாளர்கள் அதனை விலை கொடுத்து வாங்கினர். எனினும், 200 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வந்த டவர் நிலக்கரிச் சுரங்கம் 2008 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி இறுதியாக மூடப்பட்டது. அமெரிக்காவில் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலக்கரி அகழப்பட்டது. வணிக அடிப்படையிலான நிலக்கரி அகழ்வு 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெர்சீனியாவின் மிட்லோத்தியனில் தொடங்கியது.<ref>[http://www.midlomines.org/history.html Historical Overview Of The Midlothian Coal Mining Company Tract, Chesterfield County, Virginia] {{Webarchive|url=https://web.archive.org/web/20070419170121/http://www.midlomines.org/history.html |date=2007-04-19 }}, Martha W. McCartney, December, 1989</ref>
 
1880களில் நிலக்கரியை வெட்டியெடுக்கும் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்னர், [[அலவாங்கு]], [[மண்வெட்டி]] போன்ற கருவிகளே நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குப் பயன்பட்டன. 1912 ஆம் ஆண்டில் மேற்பரப்பு அகழ்வு வேலைகளை, அதற்கெனவே உருவாக்கப்பட்ட நீராவியினால் இயங்கிய இயந்திரங்கள் செய்தன.
"https://ta.wikipedia.org/wiki/நிலக்கரி_அகழ்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது