பழவேற்காடு ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 31:
 
=== வரலாறு ===
வரலாற்றில் பழவேற்காடு ஏரியினைப் பற்றிய முதல் குறிப்பு கி.பி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட 'எரிதேரியன் கடல்பயண குறிப்புகள்' என்கிற நூலில் காண கிடைக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூலின் (Periplus of the Erthraean Sea) ஆசிரியர் பெயர் தெரிய வரவில்லை. இந்நூல் பழவேற்காட்டினை இந்தியாவின் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மூன்று துறைமுகங்களில் ஒன்று என்று வரிசைப்படுத்துகிறது. இரண்டாம் நூற்றாண்டில் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த கிரேக்க அறிஞர் டோலெமி (ஆங்கிலத்தில்  Ptolomey) தொகுத்த துறைமுகங்களின் பட்டியலில் பழவேற்காடும் இருக்கிறது. அதில் பழவேற்காடு Podouke emporion என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டியலில் உள்ள துறைமுகங்கள் தூர கிழக்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனைப் பொருட்களை மேற்கிற்கு ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என டோலெமி குறிப்பிடுகிறார். மசாலா பொருட்கள், சந்தனம், முத்து, கற்பூரம், பட்டு ஆகியவை இங்கு வணிகம் செய்யப்பட்டன.<ref>ஓ.கே நம்பியார் எழுதிய “AN ILLUSTRATED MARITIME HISTORY OF INDIAN OCEAN” நூலில் '[httphttps://web.archive.org/web/20090619060909/http://www.pfr2006.nic.in/MaritimeHistory3.htm HIGHLIGHTING THE MARITIME HISTORY OF THE EASTERN SEA BOARD]' என்கிற பகுதி</ref>
 
பதிமூன்றாம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் பிறகு இந்தப் பகுதிக்கு நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்தனர். இந்த அரேபியர்கள் அப்போது வசித்த வீடுகளின் மிச்சங்களை இப்போதும் இந்தப் பகுதியில் காண முடியும். தற்போது அங்கு வசிக்கும் முஸ்லீம்கள் சிலர் இந்த குடியேற்றத்தின் வரலாற்றை நிரூபிக்க தங்களிடம் அரேபிய மொழியில் ஆவணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
வரிசை 42:
இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது. கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும். இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிர்னங்களின் தன்மையையும் உருவாக்குகிறது.
== வெளி இணைப்புகள் ==
* [http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/mathivanan3.html பாழாகிவரும் பழவேற்காடு - கட்டுரை] {{Webarchive|url=https://web.archive.org/web/20100613052809/http://thatstamil.oneindia.in/art-culture/essays/2006/mathivanan3.html |date=2010-06-13 }}
 
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/பழவேற்காடு_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது