மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 23:
சமூக நிலையில், உயரும் பெண்கல்வியால் கருவுறுதல் குறைவடைவது தடுக்கமுடியாத ஒரு விளைவாக இருக்கும். ஆனாலும், மிதமானது முதல் அதிகபட்ச அளவிலான கருத்தடுப்பு முறைகளால் குறைவான கருவுறுதல் வீதம் எட்டப்படும் என்பது முழுமையாக சாத்தியமில்லை. கணிசமான அளவு கருத் தடுப்பு முறைகளைப் பின்பற்றும் சமூகங்கள், கருத் தடுப்பு முறைகளைப் பின்பற்ற ''தகுதி வாய்ந்த'' சமூகங்கள் (எத்தனை குழந்தைகளை எப்போது பெற்று கொள்ள வேண்டும் போன்றவற்றை தீர்மானிக்கக்கூடியவை) போன்றவையும் கூட பல வேறுபட்ட கருவுறுதல் ''நிலைகளைக்'' காண்பிக்கக்கூடும். குழந்தைகளின் எண்ணிக்கை அல்லது குடும்பத்தின் அளவு போன்றவற்றுக்கு இவை தனிநபர் மற்றும் கலாச்சார விருப்பங்களுடன் இணைந்தவையாகும்.<ref>கருவுறுதல் தடுப்பு மற்றும் கருவுறுதல் நிலைகள் இடையேயான விளக்கங்களுக்கு, பார்பரா ஏ. ஆண்டர்சன் மற்றும் பிரெய்ன்.டி.சில்வர் எழுதிய "எ சிம்பிள் மெஷர் ஆஃப் ஃபெர்டிலிட்டி கன்ட்ரோல்" ஐக் காணவும்r, ''மக்கள்தொகையியல்'' 29, No. 3 (1992): 343-356, மற்றும் B. A. ஆண்டர்சன் மற்றும் B. D. சில்வர் எழுதிய, "எத்னிக் டிஃபரன்ஸஸ் இன் ஃபெர்டிலிட்டி அண்ட் செக்ஸ் ரேஷ்யோஸ் அட் பெர்த்: எவிடன்ஸ் ஃப்ரம் ஜிங்ஜாங்" ''மக்கதொகை தொடர்கள்'' 49 (1995): 211-226.கருத் தடுப்பு முறைகளின் மாதிரிகளில் கோலே மற்றும் அவரது சகாக்கள் நடத்திய அடிப்படை செயல்கள். எ.கா. ஆன்ஸ்லே ஜே. கோலே மற்றும் ஜேம்ஸ் டி.ட்ரஸ்ஸல் ஆகியோரின், "மாதிரி கருவுறுதல் திட்டங்கள்: மனிதர்களில் கருவுறுவதற்கான வாய்ப்பில் வயது சார்ந்து ஏற்படும் மாறுபாடுகள்”. ''மக்கள்தொகை அட்டவணை'' 40 (1974): 185&nbsp;– 258.</ref>
 
பெரும்பாலும் தனிநபரை மட்டுமே சார்ந்த முடிவான ''கரு தடுப்பு'' முறைகளைப் போலன்றி, கருத்தடை முறைகளுக்கான அணுகலை மக்கள்தொகை கொள்கைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றால் அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளால் அரசாங்கமும் ''மக்கள்தொகை கட்டுப்பாட்டை'' செயற்படுத்தும்.<ref>அரசாங்கங்கள் பின்பற்ற தகுந்த பல "மக்கள்தொகை கொள்கைகள்" பற்றி அறிய, பால் டெமெனியின், "பாப்புலேஷன் பாலிசி: எ கான்ஸைஸ் சம்மரி" ''மக்கதொகை கவுன்சில், கொள்கை ஆராய்ச்சி பிரிவு, இயங்கும் தாள் எண். 173'' (2003)[http://www.popcouncil.org/pdfs/wp/173.pdf http://www.popcouncil.org/pdfs/wp/173.pdf] {{Webarchive|url=https://web.archive.org/web/20091001022908/http://www.popcouncil.org/pdfs/wp/173.pdf |date=2009-10-01 }}.</ref> அரசாங்கங்கள் ரீதியான அல்லது சமூக அளவில் மக்கள் தொகை வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தும் "மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு", மேலே கூறியது போன்ற "கரு தடுப்பு" முறை அவசியமில்லை. ஏனெனில் ஒரு சமூகம் குறைந்த அளவுக்கு கரு தடுப்பு முறைகளைப் பின்பற்றினாலும் ஒரு பெரிய மாகாணம் அதன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள்தொகை ''வளர்ச்சியையும்'' ஆதரிக்கும் கொள்கைகளை ஒரு கூறாக மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சேர்க்க வேண்டியது முக்கியமானது. மேலும் மக்கள்தொகையைக் கட்டுப்பாடு என்பது அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படக்கூடாது. மக்கள்தொகை வளர்ச்சியைத் தூண்ட, [[புலம் பெயர்வு|புலம்பெயர்வுகளை]] ஆதரிப்பதோடு கூடுதல் குழந்தைகள் பெறுவோர்க்கு, வரி நன்மைகள், பண உதவிகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் மற்றும் குழந்தை கவனிப்பு போன்ற சலுகைகளையும் வழங்க வேண்டும்.<ref>சார்லோட்டெ ஹோன், "மேம்பட்ட சமூகங்களில் மக்கள்தொகை கொள்கை: பிறப்பு வீத உயர்வு மற்றும் புலம்பெயர்வு கருதுகோள்கள்," ''மக்கள்தொகை தொடர்பான ஐரோப்பிய இதழ்/Revue européenne de Démographie'' 3, எண். 3-4 (ஜூலை, 1988): 459-481.</ref> எடுத்துக்காட்டாக, இது போன்ற கொள்கைகள் சமீப ஆண்டுகளில் பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டன. மக்கள்தொகை வளர்ச்சி என்ற இலக்கை அடைய, கருக்கலைப்பு அல்லது பிறப்பு தடுப்புக்கான நவீன வழிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும் அரசுகள் பயன்படுத்தின. கருத்தடை முறைகள் மற்றும் தேவைக்கேற்ப கருக்கலைப்பு போன்றவை மீதான [[நிகோலே சீயசெச்கு|ருமேனியாவின்]] 1966 தடை இதற்கான எடுத்துக்காட்டாகும்.
 
சூழியலைப் பொறுத்தவரை, மக்கள்தொகை கட்டுப்பாடானது, [[வேட்டையாடுபவர்|வேட்டையாடும் உயிரினங்கள்]], [[நோய்]]கள், [[ஒட்டுண்ணி|சாருண்ணி]]கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றால் மட்டுமே நடைபெறுகிறது என்று கருதப்படுகிறது. ஒரு நிலைத்த சுற்றுச்சூழலில், மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது, உணவு, நீர் மற்றும் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும்தன்மையைப் பொறுத்து ஒழுங்குப்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்க வாய்ப்புள்ள சிற்றினங்கள் அல்லது தனி உயிரிகளின் அதிகபட்ச எண்ணிக்கை அதன் தாங்கும் திறன் என்றழைக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், விலங்கு மற்றும் தாவர தொகையில் மனித பாதிப்புகளும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.<ref>http://en.wikipedia.org/wiki/Hunting#Wildlife_management -ஐக் காண்க.</ref> சில [[பருவக் காலங்கள்|பருவகாலங்களில்]] கிடைக்கும் அதிகப்படியான நில உணவின் காரணமாக ஏற்படும் விலங்குகளின் பலம்பெயர்வு இயற்கையான வழி மக்கள்தொகை கட்டுப்பாடாக கருதப்படலாம். புலம்பெயர்வின்போது விட்டுச்செல்லப்படும் இடம், அடுத்த முறை அதிகப்படியான விலங்குகளுக்கு மீண்டும் உணவளிக்க தேவையானவற்றை உற்பத்தி செய்கிறது. புலம்பெயர்வு என்பதையும் காண்க.
வரிசை 39:
* [http://www.necsp.org NECSP முகப்பு பக்கம்]
* [http://www.overpopulation.info அதிக மக்கள்தொகை]
* [http://ta1.chinabroadcast.cn/1/2006/07/17/22@36037.htm உலக மக்கள் தொகை குறித்த சீன வானொலிக் கட்டுரை] {{Webarchive|url=https://web.archive.org/web/20070929124758/http://ta1.chinabroadcast.cn/1/2006/07/17/22@36037.htm |date=2007-09-29 }}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது