1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 10:
}}
[[File:1912 Summer Olympic games countries.png|thumb|right|1912 ஒலிம்பிக்கில் பங்கேற்ற நாடுகள்]]
'''1912 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்''' (சுவீடியம்: ''ஒலிம்பிஸ்கா சொம்மர்ஸ்பெலென் 1912''), அலுவல்முறையாக '''ஐந்தாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள்''' (''Games of the V Olympiad'') [[சுவீடன்|சுவீடனின்]] [[ஸ்டாக்ஹோம்|இசுடாக்கோமில்]] 1912ஆம் ஆண்டு மே 5 நாளிலிருந்து சூலை 22 வரை நடைபெற்ற பன்னாட்டு [[பல்துறை விளையாட்டுப் போட்டிகள்]] ஆகும்.<ref>Sports Reference.com (SR/Olympics), [http://www.sports-reference.com/olympics/summer/1912/ "1912 Stockholm Summer Games"] {{Webarchive|url=https://web.archive.org/web/20130302010110/http://www.sports-reference.com/olympics/summer/1912/ |date=2013-03-02 }}; retrieved 2012-7-23.</ref> இருபத்து-எட்டு நாடுகளும் 48 பெண்கள் உள்ளிட்ட 2,408 போட்டியாளர்களும் 14 விளையாட்டுக்களில் 102 போட்டிகளில் பங்கேற்றனர். அலுவல்முறையான துவக்கவிழா நடந்த சூலை 6 இலிருந்து அனைத்து போட்டிகளும், மே 5 அன்று துவங்கிய டென்னிசு போட்டிகளும் சூன் 29 அன்று துவங்கிய காற்பந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நீங்கலாக, ஒருமாதத்திற்குள் நடைபெற்றன. முழுமையும் தங்கத்தாலான பதக்கங்கள் வழங்கப்பட்ட கடைசி ஒலிம்பிக் போட்டியாக அமைந்தது. ஒலிம்பிக்கின் ஐந்து வளையங்களுக்கேற்ப ஐந்து [[கண்டம்|கண்டங்களும்]] பங்கேற்ற முதல் ஒலிம்பிக் என்ற பெருமையும் பெற்றது; முதல்முறையாக [[ஆசியா]]விலிருந்து [[சப்பான்]] பங்கேற்றது. <ref>Zarnowski, C. Frank. [http://www.aafla.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf "A Look at Olympic Costs,"] ''Citius, Altius, Fortius'' (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 20 <nowiki>[5 of 17 PDF]</nowiki>; retrieved 2012-7-24.</ref>
 
இந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக பெண்களுக்கான [[நீரில் பாய்தல்]], [[நீச்சற் போட்டி]] போட்டிகளும் ஆண்களுக்கான டெகாத்லான், பென்டாத்லான் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தடகளப் போட்டிகளில் மின்சார நேரமளவை அறிமுகப்படுத்தபட்டது. ஆனால் குத்துச்சண்டை போட்டிகள் நடத்த சுவீடன் ஒப்பவில்லை. இந்தப் போட்டிகளில் மிகக் கூடுதலான தங்கப் பதக்கங்களை ஐக்கிய அமெரிக்காவும் (25) மிகக் கூடுதலான மொத்த பதக்கங்களை சுவீடனும் (65) வென்றன.