ஆவியுயிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category நீரியல்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
[[Image:Afternoon Clouds over the Amazon Rainforest.jpg|thumb|[[அமேசான் மழைக்காடு]] மேல் உருவாகியிருக்கும் இம்முகில்கள் ஆவியுயிர்ப்பின் விளைவுகளாகும்.]]
 
தாவரங்களில் இருந்து [[நீர்]] நீராவி நிலையில் ஆவியாதலே '''ஆவியுயிர்ப்பு''' (''Transpiration'') எனப்படும். ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது வாயுப் பரிமாற்றத்திற்காக இலைவாய்கள் திறந்திருக்கும் நிலையில், தாவரத்தில் மேல்நோக்கி எடுத்து வரப்படும் நீரானது ஆவியாக இலைவாய்களூடாக வெளியேறும். இது முக்கியமாக [[இலை|இலைகளிலுள்ள]] இலைவாய்களூடாகவே இடம்பெற்றாலும், தாவரங்களின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆவியுயிர்ப்பு சிறிதளவில் நிகழும். இலைவாய் தவிர புறத்தோல், தண்டிலுள்ள பட்டைவாய்களூடாகவும் ஆவியுயிர்ப்பு நிகழ்வதுண்டு.<ref name="BBC">{{cite web | url=http://www.bbc.co.uk/schools/gcsebitesize/science/add_gateway_pre_2011/greenworld/planttransportrev2.shtml | title=Transpiration | publisher=BBC, Bitesize GCSE | accessdate=சூன் 10, 2014}}</ref><ref name="rcn">{{cite web | url=http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/T/Transpiration.html | title=user.rcn.com | accessdate=சூன் 10, 2014 | archive-date=2014-07-05 | archive-url=https://web.archive.org/web/20140705050436/http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/T/Transpiration.html | dead-url=dead }}</ref><ref name="unl">{{cite web | url=http://passel.unl.edu/pages/informationmodule.php?idinformationmodule=1092853841&topicorder=4&maxto=8 | title=Transpiration - Water Movement through Plants | publisher=Plant and Soil Sciences eLibrary | accessdate=சூன் 10, 2014}}</ref>
 
இது [[ஆவியாதல்]] போன்ற ஒரு செயற்பாடாகும். இது விலங்குகளில் வியர்த்தல் போன்றதென்றாலும் இரண்டுக்கும் பல வேறுபாடுகளும் உண்டு. மழை போதுமான அளவில் கிடைக்கும் இடங்களில் ஆவியுயிர்ப்பைத் தடுக்க தாவரங்கள் இசைவாக்கம் அடைந்திருக்காது. எனினும் வறண்ட பிரதேசங்களில் வாழும் தாவரங்களான [[கள்ளி (செடி)|கள்ளி]] போன்றவை ஆவியுயிர்ப்பைக் குறைக்க நன்றாக இசைவாக்கம் அடைந்துள்ளன. ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆவியுயிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது