இங்கிலாந்தின் இரண்டாம் மேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 34:
மேரியின் தந்தை ரோமன் கத்தோலிக்கராக 1668 இலும், தாய் எட்டாண்டுகள் பின்னரும் ரோமன் கத்தோலிக்கராக மதம் மாறினர். ஆனாலும் மேரியும், ஆனும் ஆங்கிலிக்கர்களாகவே தொடர்ந்தும் இருந்தனர்.<ref>Van der Kiste, p. 32</ref> இவர்கள் இருவரும் பெற்றோரிடம் இருந்து பிரிந்து ரிச்மண்ட் அரண்மனையில் வளர்ந்து வந்தனர்.<ref>Waller, p. 251</ref> 1671 இல் தாயார் இறக்கவே, தந்தை 1673 இல் மேரி என்னும் கத்தோலிக்கரைத் திருமணம் புரிந்தார். இவர் மேரியை விட 4 வயதே மூத்தவர்.<ref>Waller, p. 255</ref>
 
15-வது அகவையில், மேரியை [[ஒல்லாந்து|ஒல்லாந்தை]]ச் சேர்ந்த [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|வில்லியமுக்கு]] திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. வில்லியம் இரண்டாம் சார்லசு மன்னரின் சகோதரி மேரியின் மகன் ஆவார். இவர் புரட்டஸ்தாந்து மதத்தவர்.<ref>Waller, p. 256</ref> ஆரம்பத்தில், இரண்டாம் சார்லசு, இடச்சு ஆட்சியாளருடன் சம்பந்தம் வைக்க எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் மேரியை பிரெஞ்சு இளவரசர் லூயிக்குக் கொடுக்க விரும்பியிருந்தார். லூயி கத்தோலிக்கராக இருந்ததால் அவர் பிரான்சுடன் இணைப்பை ஏற்படுத்த விரும்பியிருந்தார். ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அழுத்தத்தினால் வில்லியமை ஏற்றுக் கொண்டார்.<ref name="JP">{{cite book|title=The Policy of Charles II and James II. (1667–87.)|url= http://www.uni-mannheim.de/mateo/camenaref/cmh/cmh509.html|author=John Pollock|access-date=2018-05-26|archivedate=2013-06-13|archiveurl=https://web.archive.org/web/20130613093303/http://www.uni-mannheim.de/mateo/camenaref/cmh/cmh509.html}}</ref> தந்தை யேம்சு வில்லியமை மணக்க மேரியிடம் கூறிய போது, "அவள் அன்று முழுவதும், அடுத்த நாளும் கண்ணீர் சிந்தியபடி இருந்தாள்" என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.<ref>Mary's chaplain, Dr Edward Lake, quoted in Waller, p. 257</ref>
 
== திருமணம் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_இரண்டாம்_மேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது