செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
=== யுனிசெப் ===
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்|யுனிசெப்]] அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்யவும், மருத்துவமனைக்கு எரிபொருள் மற்றும் பொருட்களை வழங்கவும், காயமடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவினர். யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஆன் எம். வெனிமேன், "இந்தக் குழந்தைகள் வன்முறையினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்" என்று கூறினார். அதே வேளையில், யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த யோன் வான் கெர்ப்பன் "இந்த நேரத்தில், அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார்.<ref>{{cite web|url=http://www.unicef.org/media/media_35336.html|title=UNICEF: Children are victims of the conflict in Sri Lanka|website=Unicef.org|accessdate=2 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.unicef.org/infobycountry/sri_lanka_35357.html|title=Sri Lankan schoolgirls killed and injured amid escalating violence|website=Unicef.org|accessdate=2 August 2017}}</ref><ref name="mg"/>
 
=== போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ===
[[சுவீடன்]] இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும், [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]]வின் தலைவருமான உல்ஃப் என்றிக்சன் தனது அறிக்கையில், தனது ஊழியர்கள் இறந்தவர்களை எண்ணி முடிக்கவில்லை என்றும், சம்பவ இடத்தில் போராளிகளின் முகாம்கள் அல்லது ஆயுதங்களின் எந்த அடையாளத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4794827.stm | work=BBC News | title=Dispute over Sri Lanka air raids | date=2006-08-15 | accessdate=2010-04-28}}</ref>
 
=== கொல்லப்பட்டவர்கள் ===
கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளர் ரி. குருகுலராஜா, முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர் பி. அரியரத்தினம் ஆகியோர் இறந்த பாடசாலை மாணவிகளின் பெயர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், [[விசுவமடு மகா வித்தியாலயம்]], உடையார்கட்டு மகா வித்தியாலயம், [[முல்லைத்தீவு மகா வித்தியாலயம்]], குமுழமுனை மகா வித்தியாலயம், [[முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி]], செம்மலை மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், முருகானந்தா மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என் உறுதிப்படுத்தினர்.<ref>{{cite web | url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19281 | title=Sencholai air-strike killed 55, details released | publisher=Tamilnet | date=18 August 2006 | accessdate=3 July 2021}}</ref><ref>{{cite web | url=https://www.tamilguardian.com/content/14-aug-2006-53-tamil-school-girls-killed-sri-lankan-air-strike-childrens-home | title=14 Aug 2006: 53 Tamil school girls killed by Sri Lankan air strike on children's home | publisher=Tamil Guardian | date=13 August 2015 | accessdate=3 July 2021}}</ref>
 
== க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி ==
== இலங்கை அரச இராணுவ பரப்புரை ==
இலங்கை அரச பேச்சாளர் [[கெஹெலிய ரம்புக்வெல]] தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்த்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார்.<ref>[http://www.army.lk/morenews.php?id=1896 Air Targets Taken Against LTTE Re-affirmed]</ref><ref>[http://onlinetamil.blogspot.com/2006/08/blog-post_115563427860613269.html இப்படிச் சொல்லுகிறார் இலங்கை அமைச்சர்]</ref>
 
== மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?==
=== ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பொறுப்பு ===
பாடசாலைகள், சிறுவர் அமைப்பு இடங்கள் மீது குண்டுவீச்சு மற்றும் இராணுவ தாக்குதல்களை தவிர்க்க [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]] தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாகவே தெரிகின்றது.
 
=== இலங்கை அரசின் பொறுப்பு ===
[[இலங்கை வான்படை]] திட்டமிட்டு, துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல, அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற [[மனித உரிமைகள்|மனித உரிமைகளை]] மதியா நிலைமையை
வெளிக்காட்டியுள்ளது.<ref>[http://www.tamilnaatham.com/articles/2006/aug/arush/15.htm தமிழீழ குழந்தைகளும் சிங்கள அரச பயங்கரவாதமும்]</ref>
 
=== பொது கேள்விகள் ===
* பங்கர் பாதுகாப்பு செஞ்சோலையில் இருந்ததா?
* கொல்லப்பட்ட அனைவரும் மாணவிகளா? ஆசிரியர்கள் எவரும் இல்லையா? எப்படி?
 
செஞ்சோலையில் கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும், பள்ளி மாணவிகள். ஆனால் அவ்விடம் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இடம் என்றால், பலியான மாணவிகளில் எத்தனை பேர் செஞ்சோலையை சார்ந்தவர்கள்?
 
== அஞ்சலி ==
1,22,366

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3238010" இருந்து மீள்விக்கப்பட்டது