குற்றவியல் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''குற்றவியல் சட்டம்''' (''Criminal law'') [[குற்றம்|குற்றங்களைக்]] குறித்தான [[சட்டம்|சட்ட]] அமைப்பு ஆகும். இது சமூக நடத்தையை ஒழுங்குபடுத்துவதுடன் மிரட்டல், தீங்கு விளைவிப்பது, மற்றும் உடல்நலம், பாதுகாப்பு, மக்களின் நன்னெறி நலம் ஆகியவற்றிற்கு குந்தகம் விளைவிக்கின்ற பிற செயல்களை தடை செய்கிறது. இந்தச் சட்டங்களை மீறுவோருக்கான தண்டனைகளையும் இது உள்ளடக்கியது. குற்றவியல் சட்டத்திற்கு மாறாக தண்டனையை விட பிணக்குத் தீர்வு மற்றும் இழப்பீடு குறித்தான சட்ட அமைப்பு [[பொதுச் சட்டம்|பொதுச் சட்டத்தில்]] [[குடிமையியல் சட்டம்]] என வரையறுக்கப்படுகிறது.
==வரலாறு==
முதல் நாகரிகங்கள் பொதுவாக குடியியல் சட்டத்தையும் குற்றவியல் சட்டத்தையும் வேறுபடுத்தவில்லை. முதன்முதலாக எழுதப்பட்ட சட்டங்களை [[சுமேரியா|சுமேரியர்கள்]] வடிவமைத்திருந்தனர். சுமார் கி.மு 2100-2050களில் உர்-நம்மு என்ற சுமேரிய மன்னர் உலகின் மிகத் தொன்மையான சட்ட விதிகளை எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<ref>Kramer, Samuel Noah. (1971) ''The Sumerians: Their History, Culture, and Character,'' p.4, University of Chicago {{ISBN|0-226-45238-7}}</ref> இதற்கும் முன்னதாக an earlier இலகாசின் உருகாகினவின் விதிகளும் இருந்துள்ளது. மற்றுமொரு முதன்மையான கோட்பாடாக '''அம்முரபி கோட்பாடு''' கருதப்படுகிறது. இது பாபிலோனிய சட்டத்தின் அடிப்படையாக இருந்தது. [[பண்டைக் கிரேக்கம்|பண்டைக் கிரேக்கத்தின்]] தொன்மையான குற்றவியல் சட்டங்களின் சிறுபகுதிகளே கிடைக்கப்பெற்றுள்ளன; [[சோலோன்]] மற்றும் டிராகோ சட்டங்கள்.<ref>"[http://mypolice.ca/research_and_publications/GreekRomanJurisprudence.htm Law and Order in Ancient Civilizations] {{Webarchive|url=https://web.archive.org/web/20090731194918/http://www.mypolice.ca/research_and_publications/GreekRomanJurisprudence.htm |date=2009-07-31 }}". James F. Albrecht, Professor, St. John’s University (NYC).</ref>
[[File:Old Bailey Microcosm edited.jpg|left|thumb|190px|1674க்கும் 1834க்கும் இடைப்பட்ட காலத்தில் [[இலண்டன்|இலண்டனில்]] உள்ள [[பழைய பெய்லி]]யில் (1808) 100,000க்கும் மேற்பட்ட குற்ற விசாரணைகள் நடைபெற்றுள்ளன.]]
 
வரிசை 9:
 
==குற்றவியல் சட்டத்தின் நோக்கங்கள்==
சட்டத்தின்படி நடக்காமைக்கு தீவிர பாதிப்புக்களையும் தண்டனைத் தடைகளையும் விதிப்பதில் குற்றவியல் சட்டம் தனித்து விளங்குகிறது.<ref>{{Cite web|url=http://www.ashgate.com/isbn/9781409427650 |author=Dennis J. Baker|title=The Right Not to be Criminalized: Demarcating Criminal Law's Authority|publisher=Ashgate|year=2011|access-date=2013-11-16|archive-date=2011-10-13|archive-url=https://web.archive.org/web/20111013102024/http://www.ashgate.com/isbn/9781409427650|dead-url=dead}}</ref> ஒவ்வொரு குற்றமும் குற்றக் கூறுகளை கொண்டுள்ளன. மிகவும் கடுமையான குற்றங்களுக்கு சில இடங்களில் [[மரணதண்டனை]]யும் வழங்கப்படுகிறது. உடல் வருத்தும் சவுக்கடி அல்லது கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளும் வழங்கப்படலாம்; இத்தகைய உடல் வருத்தும் தண்டனைகள் உலகின் பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் பல்வேறு நிபந்தனைகளுடன் சிறையில் அடைக்கப்படலாம். சிறையிருப்பு தனிமையில் இருக்கலாம். சிறைவாசம் ஒருநாளிலிருந்து வாழ்நாள் முழுமையுமாக இருக்கலாம். கட்டாய அரசுக் கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை தண்டனைகளும் வழங்கபடலாம். பிணைகளில் குறிப்பிட்ட செயல்முறைக்கேற்ப வாழ வேண்டியிருக்கலாம். குற்றம் இழைத்தவருக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களது சொத்து அல்லது பணம் கைப்பற்றப்படலாம்.
 
குற்றவியல் சட்டத்தை செயலாக்க வழங்கப்படும் இந்த தண்டனைகளுக்கு ஐந்து நோக்கங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: பழிக்குப் பழி, குற்றத்தடுப்பு, செயல் முடக்கம், சீர்திருத்தம் மற்றும் மீளமைப்பு. ஒவ்வொரு நாட்டிலும் இவற்றில் ஒவ்வொன்றிற்கும் கொடுக்கப்படும் மதிப்பு மாறுபடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/குற்றவியல்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது