பூட்டான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 223.239.62.112 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3098941 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 57:
'''பூட்டான்''' (''Bhutan'', [[திஃசொங்கா மொழி|திஃசொங்கா]] {{bo-textonly|འབྲུག་ཡུལ|lang=dz}} ''துரூ ஊ''),<ref name=Driem478>{{cite book|last1=Driem|first1=George van|title=Dzongkha = Rdoṅ-kha|date=1998|publisher=Research School, CNWS|location=Leiden|isbn=90-5789-002-X|page=478}}</ref> அல்லது '''பூட்டான் இராச்சியம்''' (''Kingdom of Bhutan'') [[தெற்காசியா]]வில் [[இமய மலை]]ச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே [[இந்தியா]]வும், வடக்கே [[திபெத்]]தும் அமைந்துள்ளன. இந்தியாவின் [[சிக்கிம்]] மாநிலம் [[நேபாளம்]] பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை ''டிரக் யூல்'' (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். [[திம்பு]] இதன் தலைநகரமாகும்.
 
பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. பூட்டான் போக்குவரத்துக் கழகம் சிலிகுரியிலிருந்து வழக்கமான பேருந்து சேவையை நடத்துகிறது. டாக்சிகளையும் வாடகைக்கு எடுக்கலாம். பரோ விமான நிலையம் பூட்டானின் ஒரே சர்வதேச விமான நிலையமாக சேவை செய்கிறது. பரோ விமான நிலையம் இருந்து புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி, பாக்டோகிரா, காத்மாண்டு, டாக்கா, சிங்கப்பூர் போன்றவை இணைக்கிறது. இது தலைநகரத்திலிருந்து சாலை வழியாக சுமார் 54 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ளது. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் ''பிசினஸ் வீக்'' இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது<ref>[{{Cite web |url=http://images.businessweek.com/ss/06/10/happiest_countries/index_01.htm |title=The World's Happiest Countries] |access-date=2008-11-07 |archive-date=2009-04-26 |archive-url=https://web.archive.org/web/20090426174928/http://images.businessweek.com/ss/06/10/happiest_countries/index_01.htm |dead-url=dead }}</ref>.
 
பூட்டானின் அரச சமயம் [[வச்சிராயணம்|வச்சிராயண பௌத்தம்]] ஆகும். மக்கள் பெரும்பாலானோர் [[பௌத்தம்|பௌத்தர்கள்]]. ஏனையோர் [[இந்து]]க்கள். [[திம்பு]] இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது [[மக்களாட்சி]]த் தேர்தல்களை [[மார்ச் 2008]] இல் நடத்தியது. பூட்டான் [[ஐக்கிய நாடுகள்]], மற்றும் [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு]] (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/பூட்டான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது