சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 41:
சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா [[தோமா (திருத்தூதர்)|புனிதா தோமா]] என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது ''புனித தோமா'' என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியாவின்]] பெயரை முதலில் அளித்திருந்தனர். "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் ("மதராஸ்", "மதராஸ்பட்டணம்") பெயராயிற்று என்பர். "மதராஸ்" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.<ref>[http://en.wikipedia.org/wiki/Madras மதராஸ் - பெயர் விளக்கம்]</ref>
 
== புனித தோமா வரலாறு ==
==புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்==
 
புனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர் துறந்திருக்கிறார் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:
 
*கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரத்து இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன<ref>[http://news.bbc.co.uk/2/hi/4970452.stm முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Muziris முசிறி துறைமுகத்தின் சிறப்பு]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Periplus_of_the_Erythraean_Sea பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்]</ref>
 
*''தோமாவின் பணிகள்'' (Acta Thomae = Acts of Thomas)<ref>[http://www.newadvent.org/fathers/0823.htm தோமாவின் பணிகள்]</ref> என்னும் சிரிய மொழி நூலில் தோமா இந்தியாவில் பணியாற்றியது கதைபோல் கூறப்படுகிறது. அந்நூலின் கற்பனை விவரங்கள் பல இருந்தாலும் வரலாற்று ஆதாரம் ஆங்காங்கே உள்ளது என்று அறிஞர் கருதுகின்றனர்.
வரி 54 ⟶ 50:
 
*தோமா கிறித்தவர் என்று அழைக்கப்படும் பிரிவினர் நடுவே பழங்காலம் தொட்டே நிலவுகின்ற வாய்மொழி மரபும் இதற்கு ஆதாரமாக உள்ளது.
 
ஆக, புனித தோமா இந்தியாவில் கிறித்தவ மறையைப் பரப்பி உயிர்நீத்தார் என்னும் செய்திக்கு வரலாற்று அடிப்படை இல்லை என்று கூறுவது சரியாகாது என்று பல அறிஞர் முடிவுசெய்கின்றனர்.
 
==சாந்தோம் கோவில் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_சாந்தோம்_பேராலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது