உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
<small><small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது</small></small>
|}
 
அறிமுகமும் பொதுவான வழிகாட்டல்களும்
 
எமது நாடு ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அளவிடமுடியாத இயற்கை அழகையும், உயிர்ப்பல்வகைமையையும் கொண்டுள்ளது. எமது தேசத்தில் பல காலநிலை வலையங்கள் உள்ளன. எமது நகரங்களிலும் பல வகை தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. ஆனால் எம் நகரங்களில் உள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இயற்கையிலிருந்து விலகியிருக்கும் குகைகள் போல உள்ளன. உயிர்ப்பல்வகைமையற்ற தன்மை காரணமாக எமது நகர வாழ் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். கடும் வேலைப்பழுவுக்கு பின்னர் வீடு திரும்பும் நகரவாழ் மக்களுக்கு தாவரங்களின் பசுமையும், பூக்களின் நறுமணமும், பறவைகளின் பாடல்களும் மிகப் பொருத்தமான சாந்தப்படுத்தும் கருவிகளாக உள்ளன. வீடுகளில் இயற்கையை சேர்ப்பதால் நம் வாழ்க்கையில் சுவையைச் சேர்க்கின்றோம். இது மட்டுமல்லாமல் மனிதர்களின் பொறுப்பற்ற சுயநலமான செயற்பாடுகள் காரணமாக நாம் எல்லோரும் தற்போது காலநிலை மாற்றத்தின் கொடுமையில் உள்ளோம். மீண்டும் மீள இயலாத ஊழிக்காலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டுள்ளோம். எனவே எமது வாழ்க்கை நடைமுறைகளை நிலைபேண்தகு தன்மையாக மாற்ற வேண்டியது மிகவும் அவசரமான, அவசியமான விடயமாக உள்ளது. இந்த பயணத்தில் எமது அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் நகரத்து வீடுகளையும் நிலைபேண்தகு குடியிருப்புகளாக மாற்ற வேண்டியது முக்கியமானதாகும். ஒரு நிலைபேண்தகு குடியிருப்பு தனது மின்சாரத்தை தானே உருவாக்கிக்கொள்ளும், இயற்கையும் மனிதரும் இணைந்து வாழும் குடியிருப்பாக இருக்கும், பிராண வாயுவை அதிகமாகவும் மாசுபாடைக் குறைவாகவும் கொண்டிருக்கும். உலகம் முழுவதும் நகரத்து குடியிருப்புகளை இயற்கை நேயமாகவும், நிலைபேண்தகுதன்மையாகவும் மாற்ற பல்வேறு புதுமையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. "பசுமை நகரம்" (Green City) எனப்படும் இந்த திட்டம் மூலம் கொழும்பு மாநகரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலைபேண்தகுதன்மையை அதிகரிக்க எண்ணியுள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் புதிய வழிமுறைகளையும், மக்களையும், இயற்கையையும் ஒன்றிணைக்க எண்ணியுள்ளோம்.
"Capture green" என்னும் ஆரம்பத் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் உள்ள மக்களிடமிருந்து பல்வேறு புத்தாக்கங்களை ஒன்றிணைக்க உள்ளோம். இந்த போட்டியில் பங்குபற்றுவதம் மூலம் இதற்கு நீங்களும் பங்களியுங்கள்.
 
* போட்டியாளர்கள் நகரங்களில் பயன்படுத்தக்கூடிய தாவர வளர்ப்பு முறைகளின் புகைப்படமொன்றை தெரிவு செய்ய வேண்டும். அந்த புகைப்படத்துக்கு பொருத்தமான கருத்தாக்க முன்மொழிவை பேச்சின் மூலமோ, எழுத்து மூலமோ முன்மொழிய வேண்டும். முன்மொழிவு புத்தாக்கம் நிரம்பியதாக இருக்க வேண்டும்.
* முன்மொழிவை ஒரு பேச்சாத வழங்க விரும்பினால் அதை ஒரு காணொளியாக தரப்பட்ட கூகிள் படிவத்தில் பதிவேற்றவும்.
* முன்மொழிவை எழுத்துவடிவத்தில் வழங்க விரும்பினால் அதை எந்தவொரு ஆவண வடிவத்திலும் கூகிள் படிவத்தில் பதிவேற்றலாம்.
* எல்லா பதிவேற்றங்களும் ஒழுங்கமைப்புக் குழுவால் ஆரம்ப சோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் நடுவர் குழுவால் பரிசீலிக்கப்படும்.
* தெரிவுசெய்யப்பட்ட பதிவுகள் எமது முகப்புத்தகத்திலும், யூ டியூப் தளத்திலும் பதிவேற்றப்படும்.
* காணொளியிலோ, முன்மொழிவிலோ உள்ள கருத்துக்களுக்கு ரொட்டரக்ட் கழகம் பொறுப்பேற்காது.
* ஒழுங்கமைப்புக் குழுவினதும், நடுவர்களினதும் முடிவுகள் இறுதியானதாக இருக்கும்.
 
போட்டிக்கான தகுதி வரம்புகள்:
* போட்டியில் எவரும் பங்குபற்றலாம். எந்தவொரு வயதெல்லையும் இல்லை.
* இளம் போட்டியாளர்கள் (18-30 வயது) அதிகம் வரவேற்கப்படுகின்றனர்.
 
பேச்சு, எழுத்து வடிவ முன்மொழிவுக்கான வழிகாட்டல்கள்:
அ) பேச்சு:
* பேச்சானது காணொளி வடிவில் பதிவேற்றப்பட வேண்டும்.
* காணொளி 5 நிமிடத்துக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.
* பேச்சு ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஏதாவதொன்றில் இருக்க வேண்டும்.
* பேச்சாளர் பொருத்தமான ஆடையை அணிந்திருக்க வேண்டும்.
* காணொளியின் பின்புலம் வெறுமையானதாகவும், இரைச்சலின்றியும், பொருத்தமான தரத்தையும் கொண்டிருக்க வேண்டும்.
* காணொளியில் கூறப்படும் முன்மொழிவு பங்கேற்பாளரின் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும்.
 
ஆ) எழுத்து வடிவ முன்மொழிவு:
* தட்டச்சு செய்யப்பட்ட ஆவணமாக இருக்க வேண்டும். (pdf, doc, docx வடிவங்களில் இருக்கலாம்)
* ஆகக்குறைந்தது 200 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும்.
* ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் ஏதாவதொன்றில் இருக்க வேண்டும்.
* முன்மொழிவு பங்கேற்பாளரின் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும்.
 
உள்ளடக்கம் தொடர்பான வழிகாட்டல்கள்:
 
ஒரு பதிவில் ஒரு புகைப்படமும், அதனுடன் தொடர்புபட்ட முன்மொழிவும் இருக்க வேண்டும். போட்டியாளர் தமக்கு விருப்பமான புகைப்படத்தைத் தெரிவு செய்ய முடியும். புகைப்படம் போட்டியாளர் எடுத்த புகைப்படமாக இல்லாவிட்டால் அப்புகைப்படத்தின் மூலத்தை கூகிள் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
 
முன்மொழிவின் உள்ளடக்கம்:
படி 1: புகைப்படம் தொடர்பான அறிமுகத்தை வழங்குங்கள்.
படி 2: புகைப்படத்தில் காட்டப்படும் புத்தாக்க தாவர வளர்ப்பின் அனுகூலங்களையும், பிரதிகூலங்களையும் ஆராயுங்கள்.
படி 3: புகைப்படத்தில் உள்ள புத்தாக்கம் எவ்வாறு நகரப்புற சூழலில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வாகின்றது என்றும், எவ்வாறு இது புத்தாக்கமாகக் கருதப்படும் என்றும் கூறுங்கள்.
படி 4: 50 சொற்களுக்கு மேற்படாத சுருக்கம்.
 
சிறந்த புகைப்படம் விருதுக்குக் கருதப்பட விரும்பினால்,
பேச்சு/ எழுத்துவடிவ முன்மொழிவுடன் பதிவேற்றப்படும் புகைப்படம் பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்:
அ) போட்டியாளரால் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும்.
ஆ) மட்டுப்படுத்தப்பட்ட இடத்தினுள் தாவரங்களை வளர்க்கும் முறைகளை காண்பிப்பதாக இருக்க வேண்டும்.
இ) புகைப்படத்துக்கு உருவளவு மட்டுப்பாடு இல்லை.
ஈ) புகைப்படத்துக்கு சிறியளவு மாற்றங்களே செய்ய இயலும் (brightness, cropping)
உ) புகைப்பட எண்ணிக்கையில் மட்டுப்பாடுகள் இல்லை. (ஆனால் ஒவ்வொரு புகைப்படமும் தனித்தனியாக வெவ்வேறு முன்மொழிவுகளுடன் பதிவேற்றப்பட வேண்டும்.)
 
தகுதிநீக்கல் தொடர்பான விடயங்கள்:
 
சிறந்த முன்மொழிவு, பிரபல்யமான முன்மொழிவுக்கான போட்டிகளுக்கு:
* சொந்த முன்மொழிவுகளாக இல்லாமலிருத்தல். வேறு மூலங்களிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தால் அக்கருத்துக்களின் மூலம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
* பொருத்தமற்ற நடத்தையை அல்லது பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தல்.
* ஒரு பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றுதல்.
 
சிறந்த புகைப்படம் தொடர்பாக:
* போட்டியாளரின் சொந்த முயற்சியாக இல்லாமலிருந்தால் சிறந்த புகைப்படம் விருதுக்கான தெரிவிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படும்.
* பேச்சாகவோ, எழுத்தாகவோ முன்மொழிவொன்றை இணைக்காவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படும்.
 
இறுதித் திகதி:
ஆகஸ்ட் 31ஆம் திகதி
 
கூகிள் படிவம் மூலமான பதிவேற்றத்துக்கான வழிகாட்டல்கள்:
 
பின்வரும் தகவல்களும், தரவுகளும் கூகிள் படிவம் மூலம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்:
1. பெயர்
2. வயது
3. கழகம்/ நிறுவனம் (கட்டாயமல்ல)
4. தொலைபேசி இலக்கம்
5. மின்னஞ்சல் முகவரி
6. முகப்புத்தக இணைப்பு (கட்டாயமல்ல)
7. இன்ஸ்டகிராம் இணைப்பு (கட்டாயமல்ல)
8. போட்டிக்கான புகைப்படம் (1)
9. பேச்சின் காணொளி அல்லது முன்மொழிவின் எழுத்துவடிவ ஆவணம்
10. தேவையான மேற்கோள்கள்
 
மதிப்பீடு:
 
3 வெற்றியாளர்கள் பின்வரும் மதிப்பீடுகளூடாகத் தெரிவுசெய்யப்படுவர்.
 
1. சிறந்த முன்மொழிவு: நடுவர்கள் மூலம் முன்மொழிவின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக்கொண்டு தெரிவுசெய்யப்படுவார்.
 
2. சிறந்த புகைப்படம்: புகைப்படத்தின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடுவர்கள் மூலம் தெரிவு செய்யப்படுவார்.
 
3. பிரபல்யமான முன்மொழிவு: சமூக வலைத்தளத்தில் முன்மொழிவின் பதிவுக்கு கிடைக்கும் வரவேற்புக்கேற்றவாறு தெரிவுசெய்யப்படுவார்.
யூடியூப்பின் ஒரு பார்வை- 1 புள்ளி
யூடியூப்பில் ஒரு லைக்- 1 புள்ளி
முகப்புத்தகத்தில் ஒரு பார்வை- 1 புள்ளி
முகப்புத்தகத்தில் ஒரு லைக்- 1 புள்ளி
 
விருதுகள்:
 
*அனைத்து போட்டியாளர்களும் பங்கேற்றதற்கான இலத்திரனியல் சான்றிதழ் வழங்கப்படும்
* 3க்கு மேற்பட்ட பதிவுகள் ஒரே நிறுவனத்திடமிருந்து கிடைக்குமானால் அந்நிறுவனத்துக்கு பங்கேற்றதற்கான இலத்திரனியல் சான்றிதழ் வழங்கப்படும்.
* சிறந்த முன்மொழிவின் வெற்றியாளருக்கு 5000 ரூபா பணப்பரிசு.
* சிறந்த புகைப்படத்துக்கான வெற்றியாளருக்கு 3000 ரூபா பணப்பரிசு.
* பிரபல்யமான முன்மொழிவுக்கான வெற்றியாளருக்கு 2000 ரூபா பணப்பரிசு.
 
தொடர்புக்கு:
 
அஃப்ரா நியாஸ்: 0702855757
துலான பவித்ர: 0764824609
மின்னஞ்சல்: rotaractmfc@gmail.com
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan" இலிருந்து மீள்விக்கப்பட்டது