தாலிபான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
[[தோகா ஒப்பந்தம், 2020|2020 தோகா ஒப்பந்தப்படி]] அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகளின் படைகள் 31 ஆகஸ்டு 2021 அன்று முழுவதுமாக வெளியேறிவிடுவதாகவும், அதுவரை படைவீரர்களுக்கும், வெளியேறுதல்களுக்கும், [[தாலிபான்]] உள்ளிட்ட பிற இயக்கங்கள் தீங்கு விளைவிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா தனது துருப்புக்களை ஆப்கானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், 15 ஆகஸ்டு 2021 அன்று [[காபூலின் வீழ்ச்சி, 2021|காபூலின் வீழ்ச்சிக்குப்]] பின்னர் தாலிபான் படைகள் [[காபூல்]] நகரத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டதுடன், நாட்டில் ஷரியா சட்டம் மீண்டும் கைப்பிடிக்கப்படும் என்றனர். இதனிடையில் ஆப்கான் அதிபர் [[அசரஃப் கனி அகமத்சய்|அஷ்ரப் கனி]] 14 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கான் துணி அதிபர் [[அம்ருல்லா சலே]] தனது சொந்தப் பகுதியான [[பாஞ்ச்சிர் சமவெளி|பாஞ்சிரி பள்ளத்தாக்கிற்கு]] சென்றார்.
 
தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட அர்சு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் படைவீரரகளுக்கு தாலிபான்கள் பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் துன்புறுத்த மாட்டார்கள் என வாக்களித்தனர். ஆப்கானிய அறிவு ஜீவிகள் மட்டும் ஆப்கானிலேயே தங்க வேண்டும் என தாலிபான்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர். இருப்பினும் 16 ஆகஸ்டு 2021 முதல் [[காபூல்]] நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதரகத்தில் வேலைபார்த்த ஆப்கானியர்கள் தங்கள் குடும்பத்துடன் வானூர்திகளில் ஏறி மேற்குலக நாடுகளுக்குச் சென்றனர். இதனிடையே [[ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்| ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின்]] நுழைவாயில் அருகே அடுத்தடுத்து இரண்டு [[2021 காபூல் வானூர்தி நிலையத் தாக்குதல்|தற்கொலை குண்டு வெடிப்புகள்]] நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளுக்கு [[இசுலாமிய அரசு, கொராசான்]] பெறுப்பு ஏற்றது.<ref>[https://www.theguardian.com/world/live/2021/aug/26/afghanistan-live-news-updates-evacuation-refugees-taliban-kabul-airport-latest ISKP responsibility for Kabul Airport Blast]</ref> குண்டு வெடிப்பில் 68க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களும், 13 அமெரிக்கத் துருப்புகளும், 2 பிரித்தானிய துருப்புகளும் கொல்லப்பட்ட்டனர்.<ref>{{Cite web |url=https://apnews.com/article/europe-france-evacuations-kabul-9e457201e5bbe75a4eb1901fedeee7a1 |title=Kabul airport attack kills 60 Afghans, 13 US troops |work=[[Associated Press]]|date=26 August 2021 |access-date=26 August 2021 |url-status=live }}</ref>
 
==தற்போதைய தாலிபான் தலைவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாலிபான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது