பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 164:
 
இவை இந்த இரண்டு நோய்களுக்கும் இடையே பிரதான வித்தியாசங்களாக இருந்தாலும், நோயறிகுறிகளைக் கொண்டு வேறுபடுத்துவது கடினமாக உள்ளது. எனவே கோவிட்-19 தொற்றை உறுதிப்படுத்த PCR சோதனை செய்வது அவசியமானதாக உள்ளது.
 
உங்களுக்கு கோவிர்-19 தொற்று இருக்கும் என நீங்கள் சந்தேகப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 
உங்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஆகிய நோயறிகுறிகள் இருந்து நீங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதினால் உங்களையும், உங்களை சூழ உள்ளோரையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
 
* மருத்துவ உதவிக்காக வெளியே போவதைத் தவிர, இயலுமான வரை வீட்டினுள்ளேயே இருக்க முயற்சி செய்யுங்கள்.
 
* மருத்துவ உதவிக்காக வெளியே செல்லும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றுங்கள். உங்கள் வைத்தியரிடம் பயண விபரங்களையும், தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடிய வழிமுறைகளையும் முழுமையாகக் கூறுங்கள்.
 
* வீட்டில் உங்கள் அறையை மட்டும் பயன்படுத்துங்கள். உங்களுடைய கோப்பை, தட்டு, படுக்கையை மட்டும் பயன்படுத்துங்கள். இவற்றை தனியாக சவர்க்காரத்தையும், நீரையும் கொண்டு கழுவுங்கள். வீட்டில் ஏனையோரிடமிருந்து இயலுமானவரை விலகி இருங்கள்.
 
* உங்கள் கைகளை இடைக்கிடையில் 20 விநாடிகளுக்காவது சரியான முறையில் சவர்க்காரம் மற்றும் நீரைப் பயன்படுத்திக் கழுவுங்கள். வீட்டில் ஏனையோரையும் இவ்வாறு கழுவச் சொல்லுங்கள்.
 
* வீட்டில் விருந்தினர்களை வரும்படி அழைக்காதீர்கள்.
 
* இருமும் போதும், தும்மும் போதும் டிஷ்ஷு ஒன்றை அல்லது உங்கள் முழங்கையின் உட்பகுதியையோ பயன்படுத்தி மூடிக்கொள்ளுங்கள். முகக்கவசங்களையும், கையுறைகளையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அவறை மூடி உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பாதுகாப்ப போட்டு அகற்றிடுங்கள்.
 
* மேற்கூறிய அறிகுறிகளுடன் இறுதி 14 நாட்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளான நபரொருவடுன் தொடர்பு இருந்தாலோ அல்லது தொடர்பு இருக்குமென நீங்கள் கருதினாலோ அல்லது வெளிநாட்டிலிருந்து வருகை தந்து 14 நாட்களாகவில்லை என்றாலோ உங்கள் பிரதேசத்துக்குரிய பொதுச்சுகாதார அதிகாரிக்கு உடனடியாக அறிவிங்கள். அருகிலுள்ள வைத்தியசாலையிலிருந்து மருத்துவ ஆலோசனையையும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
 
* அவசர நிலைமைகளின் போது 1990 மருத்துவ அவசர ஊர்தி சேவைக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.
 
* 1999 அவசர இலக்கத்துக்கு அழைப்பதன் மூலமும் கோவிட்-19 தொடர்பான மருத்துவ ஆலோசனைகளையும், வேறு விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
 
SARS CoV2 வைரஸ் தொற்றால் தீவிர உயிராபத்தை எதிர்நோக்கக்கூடியவர்கள் யார்?
 
இவ்வைரஸால் தொற்றுக்குள்ளாக்கபட்ட அனைவரும் தீவிர உயிராபத்தை எதிர்கொள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் அறிகுறிகளற்றோ அல்லது மெல்லிய அறிகுறிகளோடே இருப்பர். எனினும் சிலர் ஏனையோரை விட உயிராபத்தை எதிர்நோக்கும் தனமையை அதிகமாகக் கொண்டுள்ளனர். அதிக வயது, சில இனக்குழுவின் அங்கத்தவராய் இருத்தல், பாலினம், சில நோய்களுக்கு உள்ளாகியிருத்தல், சில மருந்துகளின் பாவனை, ஏழ்மை, சன நெரிசலான இடங்களில் வசித்தல்/ வேலை செய்தல், சில தொழில்கள், கர்ப்பமுற்றிருத்தல் ஆகிய காரணிகள் தீவிர நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இவற்றில் பிரதானமாக வயதில் முதிர்ந்தோராய் இருத்தலும், நீண்டகால நோய்களைக் கொண்டிருத்தலும் முக்கிய காரணிகளாக உள்ளதுடன் இவற்றின் பங்களிப்பு தொடர்பில் அதிக ஆதாரங்கள் உள்ளன. 85 வயதிற்கு மேற்பட்டோரில் அதிதீவிர நோய்க்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
 
பின்வரும் நோய்களைக் கொண்டுள்ள எவ்வயதினரும் ஏனையோரை விட தீவிர நோய்க்கான வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர்:
* குருதி தொடர்பான நோய்கள். உ-ம்: தலசீமியா
* புற்றுநோய்
* இருதயச் சுற்றோட்டத்துக்குரிய நோய்கள் மற்றும் மூளைச் சுற்றோட்டத்துக்குரிய நோய்கள் (உ-ம்: மாரடைப்பு, பக்கவாதம்)
* அதிக குருதியழுத்தம்
* தீவிர இதய நோய்கள் (உ-ம்:இதய செயலிழப்பு)
* நீண்டகால சிறுநீரக நோய்
* நிர்ப்பீடனத் தொகுதிக் குறைபாடுகள் (உ-ம்: என்பு மச்சையுடன் தொடர்புபட்ட நோய்கள்/ குறைபாடுகள், மச்சை இடமாற்றம், HIV-AIDS, ஸ்டிரொய்ட்/ நிர்ப்பீடனத்தொகுதி வலுக்குன்றச் செய்யும் வேறு மருந்துகளின் பாவனை)
* ஈரல் நோய்கள்
* டிமென்ஷியா போன்ற நரம்புத் தொகுதி நோய்கள்
* அதிக உடற்பருமன் (BMI>30)
* ஆஸ்துமா போன்ற நீண்டகால சுவாச நோய்கள்
* வகை-2க்குரிய நீரிழிவு நோய்
 
இவற்றைத்தவிர புகைப்பிடித்தல் நேரடியாகவும், நீண்டகால சுவாச நோய்களை, புற்றுநோய்களை ஏற்படுத்துவதாலும் கோவிட்-19இன் தீவிர நோயை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றது.
 
மற்றைய சிறுவர்களை விட நரம்பியல், மரபியல், அனுசேபக் குறைபாடுகளைக் கொண்டுள்ள சிறுவர்களும், பிறப்பால் உண்டாகிய இருதய நோய்களுடைய சிறுவர்களும் தீவிர நோயைப் பெறும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர்.
 
கோவிட்-19இன் நீண்டகால விளைவுகள்
 
கோவிட்-19 பிரதானமாக நுரையீரல்களைப் பாதித்தாலும் அதன் பாதிப்பு மற்றைய அங்கங்களையும் விட்டுவைப்பதில்லை. அத்துடன் வயது முதிர்ந்தோரும், ஏனைய நீண்ட கால நோயுடையோரும் ஏனையோரை விட வலுக்குறைந்த உடலைக் கொண்டுள்ளதால், அவர்களிடம் அதிக காலம் கோவிட்-19இன் அறிகுறிகள் காணப்படலாம்.
 
கோவிட்-19ஆல் பாதிக்கப்படும் பிரதான அங்கம் நுரையீரலாகும். கோவிட்-19ஆல் நுரையீரலில் நுரையீரல் தொற்று/ நியூமோனியா நிலை ஏற்படும். இதனால் உண்டாகும் சுவாசச்சிற்றறைகளின் பாதிப்பு நீண்ட காலம் இருக்கலாம். நியூமோனியாவில் உண்டாகும் நார்டைதல் (scarring) காரணமாக நீண்ட காலத்துக்கு சுவாசிப்பதில் சிரமம் காணப்படலாம்.
 
கோவிட்-19 தொற்று நீங்கி பல மாதங்களின் பின்னும் இதயத் தசைகளில் பாதிப்பு தொடர்கின்றமை கதிரியக்கப் படமெடுக்கும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது தீவிர அறிகுறிகளைக் கொண்டுள்ளோரில் மட்டுமலாமல் குறைவான அறிகுறிகளைக் கொண்டிருந்தோரிலும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான பாதிப்புகளால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 
குலைன்-பாரே சின்ட்ரோம், பக்கவாதம் போன்ற நரம்புத் தொகுதியுடன் தொடர்புபட்ட பாதிப்புகள் முதியோரில் மட்டுமல்லாமல் இளையோரிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றிலிருந்து விலகிய பின்னர் கூட இதன் தாக்கத்தால் பார்க்கின்சன் நோய், அல்ஸைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
 
அத்துடன் நோய்த்தொற்று உள்ள போது இரத்தம் உறையும் தன்மை அதிகரிக்கும். இதனால் குருதிக்கலன்களுக்குள் இரத்தம் உறைவதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நீண்டகால நோய்கள் ஏற்படலாம். இதயம், மூளை மட்டுமலாமல் ஈரல், சிறுநீரகங்களுக்குரிய குருதிக்கலன்களும் அடைக்கப்பட்டு வேறு பல நீண்ட கால பாதிப்புகளும் ஏற்படலாம்.
 
உடல் களைப்பு, இருமல், சுவாசச்சிரமம், தலைவலி, மூட்டுவலி என்பன நீண்டகாலம் காணப்படலாம். இவற்றை தீவிரமாகக் கொண்டுள்ளோர் நீண்ட காலம் வென்டிலேட்டர்களின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதால், அதிர்ச்சிக்குப் பின்னரான மன அழுத்தக் கோளாறையும், மனச்சோர்வையும் உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர்.
 
எனினும் இது ஒரு புதிய வைரஸ் என்பதால் பல நீண்டகால பாதிப்புகள் இதுவரை கண்டறியப்படாமல் உள்ளன. எனினும் ஸார்ஸ் (SARS) தொற்று போலவே இதன் நீண்ட கால விளைவுகளும் இருக்கும் என விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஊகித்துள்ளனர். கோவிட்-19இலிருந்து விரைவாகக் குணமடையும் நோயாளிகளிலும் அதன் நீண்டகாலப் பாதிப்புகள் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கோவிட்-19 தொற்றாமல் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும். எப்போதும் குணப்படுத்தலை விட தடுத்தல் சிறந்தது.
 
படியேற்ற வளர்ச்சி என்றால் என்ன?
 
இலங்கையில் முதல் 100 நோயாளிகள் அறிக்கையிடப்பட 54 நாட்களும், இரண்டாவது 100 நோயாளிகள் அறிக்கையிடப்பட 19 நாட்களும், மூன்றாவது 100 நோயாளிகள் அறிக்கையிடப்பட 8 நட்களும், நான்காவதற்கு 4 நாட்களும், ஐந்தாவதற்கு 2 நாட்களும் எடுத்தது. இதை வாசித்தவுடன் எமக்கு தோன்றும் முதலாவது கேள்வி- ஏன் கோவிட்-19 தொற்றின் நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வளவு சடுதியாக அதிகரிக்கின்றது?
 
இதற்குக் காரணம் பெருந்தொற்றுக்களின் படியேற்ற வளர்ச்சித் தன்மையாகும். படியேற்ற வளர்ச்சி என்றால் என்ன?
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது