மரியாவின் பிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 15:
கி.பி.2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட '''யாக்கோபின் முதல் நற்செய்தி''', கன்னி மரியாவின் பிறப்பைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறது:
 
எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான [[யோவாக்கிம்]] (சுவக்கீன்), அவரது மனைவி [[அன்னா]] (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர்.<ref>[{{Cite web |url=http://www.catholicnewsagency.com/saint.php?n=357 |title="The Birth of the Blessed Virgin Mary", Catholic News Agency] |access-date=2014-06-07 |archive-date=2017-11-13 |archive-url=https://web.archive.org/web/20171113185254/https://www.catholicnewsagency.com/saint.php?n=357 |dead-url=dead }}</ref> இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]] (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.
 
மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்வி சாலையில், மரியா எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியா ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மரியாவின்_பிறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது