சர்க்கரைப் பதிலீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*, உள்ளிணைப்புக்கள்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 6:
[[சுக்குரோசு]] அல்லது வேறு சர்க்கரைப் பொருட்களை [[உணவு|உணவுப் பொருட்களில்]] சேர்க்கும்போது அவற்றுக்குச் சிறப்பான தோற்றத் தன்மை அல்லது நாவுணர்ச்சித் தன்மை கிடைப்பது உண்டு. சர்க்கரைப் பதிலீடுகள் இவ்வாறான தன்மைகளைக் கொடுப்பது இல்லை. இதனால், இப்பதிலீடுகளுடன் [[பருமமாக்கு பொருள்|பருமமாக்கு பொருட்களையும்]] சேர்க்கவேண்டி ஏற்படுகிறது. [[பத்தியக் குளிர்பானம்|பத்தியக் குளிர்பானங்களிலும்]], மேசைச் சர்க்கரைக்கான மாற்றுப் பொருள்களிலும் சர்க்கரைப் பதிலீடுகளுடன் இவ்வாறான பருமமாக்கு பொருட்களைச் சேர்ப்பது உண்டு.
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆறுவகையான சர்க்கரைப் பதிலீடுகள் பயன்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை, [[இசுட்டெவியா]], [[அசுப்பர்ட்டேம்]], [[சுக்கிரலோசு]], [[நியோட்டேம்]], [[ஏசுசல்பேம் பொட்டாசியம்]], [[சக்கரின்]] என்பவை. செயற்கை இனிப்பூட்டிகள் உணவுச் சேர்பொருட்களாகப் பயன்படுத்தப்படுவதை ஐக்கிய அமெரிக்க [[உணவு மற்றும் மருந்து நிர்வாகம்]] கட்டுப்படுத்துகிறது.<ref>FDA No Calories... Sweet! [http://www.fda.gov/fdac/features/2006/406_sweeteners.html fda.gov] {{Webarchive|url=https://web.archive.org/web/20060820113036/http://www.fda.gov/fdac/features/2006/406_sweeteners.html |date=2006-08-20 }}</ref> இவ்வாறான செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதனால், உடல்நலத்துக்குத் தீங்கு உண்டா என்பது குறித்து பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
அமெரிக்காவில் எல்லா சர்க்கரைப் பதிலீடுகளும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பொருட்களைப் "பாதுகாப்பானதாகப் பொதுவாக அடையாளம் காணப்பட்டவை" என்னும் தலைப்பில் பட்டியலாக வெளியிடுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட எந்தச் சர்க்கரைப் பதிலீடுகளின் அங்கீகார நிலையையும் மாற்றக்கூடிய வகையிலான அறிவியல் அடைப்படையிலான சான்றுகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இப்பொருட்களை அனுமதிப்பது குறித்த முடிவுகளை எடுக்கும்போது, [[நச்சியல்]], [[மருத்துவம்]] ஆகியவை சார்ந்த ஆய்வுத் தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான விரிவான ஆய்வுத் தகவல்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சர்க்கரைப்_பதிலீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது