காவேரி கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{வார்ப்புரு:தகவல்பெட்டி வரைக்கதை உருவாக்குபவர் |birth_place= |nationality=இந்தியன் |area=Illustrator, Comic Maker, Art Director |signature= |publish= |awards= |years_active=2014-தற்போது |sortkey= |subcat= |spouse= |children= |website= https://www.ka..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:30, 4 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

{{#if:||

காவேரி கோபாலகிருஷ்ணன்
Nationalityஇந்தியன்
Area(s)Illustrator, Comic Maker, Art Director
Official website

காவேரி கோபாலகிருஷ்ணன் (ஆங்கில மொழி: Kaveri Gopalakrishnan) என்பவர் சிட்னியில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுயாதீன வரைகதைக் கலைஞர், ஓவியர், கலை இயக்குநர் ஆவார். 2018 மகளிர் தின கூகிள் டூடுளில் காட்சிப்படுத்தப்பட்ட ஆன் தி ரூப் என்ற ஊடாடகக்கூடிய ஓவியத்தின் மூலம் கவனம் பெற்றவர்.[1] குறிப்பாக இந்த ஓவியம் வாசிப்பை நேசிக்கும் வகையில் அமைந்திருந்தது.[2] 2018 ஆம் ஆண்டு கூகிள் சிறப்பு செய்த 18 பெண் கலைஞர்களில் இருவரும் ஒருவராவார்.[3]

தொழில் வாழ்க்கை

இளம் வயதிலிருந்து எழுத்திலும் கதை ஓவியத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு அசைவுரு திரைப்பட வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2020 இல் ஆஸ்திரேலிய சிட்னியிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வடிவமைப்பில் ஆய்வுநோக்கில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[சான்று தேவை]

2013 இல் ஒரு பதிப்பகத்தில் ஓவியராக காவேரி பணியைத் தொடங்கினார். மேலும் சம்பக், பிராதம் புக்ஸ், ஜீஈ சுகாதாரம், ஸ்காலஸ்டிக், இன்ஸ்ட்டாகிராம், முகநூல், டெட்டெக்ஸ் உட்படப் பல்வேறு அமைப்புகளுக்குப் பட ஓவியங்களை வழங்கியுள்ளார். மேலும் தங்கல் என்ற திரைப்படத்திற்கும் கைப்பேசி வரைகதைகளை உருவாக்கியுள்ளார்.[சான்று தேவை]

இவர் ஆர்த்தி பார்த்தசாரதியுடன் இணைந்து அர்பன்லோரி என்ற இணைய வரைகதைத் தொடரைத் தொடங்கினார்.[4] மேலும் இவர் சர்வதேச தொகுப்பாக கதக் கலக்டிவ்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும், ஸ்டோரிவீவர் தளத்தில் கல்வித் தொடர் ஒன்றின் கலை இயக்குநராகவும், சமூக-அரசியல், கல்வி மற்றும் மனநலம் உட்பட பல்வேறு கருவில் வரையும் சுயாதீன ஓவியராகவும் உள்ளார்.[5][6]

கண்காட்சிகள்

  • 2018 மங்காசியா: ஒண்டர்லாண்ட் ஆப் ஆசியன் காமிக்ஸ், பார்பிகன் லண்டன்
  • 2017 இண்டர்நேசனலர் காமிக்-சலூன் எர்லங்கன், ஜெர்மனி
  • 2017 டெல்லி காமிக் ஆர்ட்ஸ் பெஸ்டிவல், புது தில்லி
  • 2016 காமிக் கிரேடக்ஸ்: 100 விமன் மேக்கிங் காமிக்ஸ் அட் ஹவூஸ் ஆப் இலுஸ்ட்ரேசன், லடண்டன்
  • 2016 ஈஸ்ட் லண்டன் காமிக் அண்ட் ஆர்ட்ஸ் பெஸ்டிவல், லண்டன்
  • 2015 லெஜண்ட் ஆப் தி டிராயிங் போர்ட், பூமா சமூக மன்றம்
  • 2014 கேளரீஸ், நியூ யார்க் நகரம்

மேற்கோள்கள்

  1. "International Women's Day 2018". கூகிள். பார்க்கப்பட்ட நாள் 4 September 2021.
  2. "12 Women Share Empowering Stories for International Women's Day on Google Doodle". Billboard. https://www.billboard.com/articles/news/8235938/international-womens-day-on-google-doodle. 
  3. "Did You Know There Are A Young Indian Artist's Sketches In Today's Women's Day Google Doodle?" (in en). indiatimes.com. https://www.indiatimes.com/technology/news/google-s-women-s-day-doodle-celebrates-the-work-of-bangalore-based-artist-kaveri-gopalakrishnan-341039.html. 
  4. "Urbanlore, a new webcomic series traces a changing urban India". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://indianexpress.com/article/lifestyle/faces-of-the-city/. பார்த்த நாள்: 4 September 2021. 
  5. "Kaveri Gopalakrishnan on the joys of illustration" (in en). femina.in. https://www.femina.in/achievers/illustrator-kaveri-gopalakrishnan-41138.html. 
  6. "Urbanlore, a new webcomic series traces a changing urban India". The Indian Express (in ஆங்கிலம்). 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_கோபாலகிருஷ்ணன்&oldid=3272447" இலிருந்து மீள்விக்கப்பட்டது