கரோலஸ் லின்னேயஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
"கார்ல் லின்னேயஸ்", "கரோலஸ் லின்னேயஸ்", கார்ல் வொன் லின்னே, "கார்ல் லின்னே" போன்ற பல்வேறுபட்ட பெயர்கள்வழி இவர் குறிப்பிடப்படுகின்றார். இவரது உண்மையான [[சுவீடிய மொழி]]ப் பெயர்பற்றி இப்பொழுதும் குழப்பம் நிலவுகிறது.(சுவிடியப் பெயர்-"Carl von Linné"; இலத்தீனியப்பெயர்-"Carolus Linnaeus" (1707–1778)) 'கார்லஸ் லின்னேயஸ்' என்பது லத்தீனாக்கம் செய்யப்பட்ட பெயராகும். இப்பெயரையே அவர், [[இலத்தீன்]] மொழியில் தான் எழுதிய அறிவியல் நூல்களில் பயன்படுத்தியுள்ளார்.
 
== வரலாறு ==
 
சுவீடனின் இராசல்ட்டு கிராமத்தில் கரோலஸ் லின்னேயஸ், 1707 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள், ஒரு பண்ணையில் பிறந்தார். இந்த இராசல்ட்டு(''Råshult'') என அழைக்கப்படும் பகுதி, தென் சுவீடனில் ஸ்மாலாந்து (''Småland'') மாகாணத்தில் உள்ள ''Älmhult Municipality'' இல் அமைந்துள்ளது.
வரிசை 72:
லின்னேயஸ் பிறந்த ஆண்டின் நூற்றாண்டுகளில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகிறது. லின்னேயஸின் உருவம் பொதிந்த பல சுவீடிய [[அஞ்சல் தலை]]கள் மற்றும் நோட்டுகள் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் லின்னேயசுக்கு ஏராளமான [[சிலை]]கள் உள்ளன. 1888 முதல் லண்டன் லின்னியன் சங்கத்தின் சார்பில் [[தாவரவியல்]] அல்லது [[விலங்கியல்|விலங்கியலில்]] சிறப்பான பணியாற்றியவர்களுக்கு லின்னியன் பதக்கம் வழங்கப்பட்டது. வாக்‌ஷொ பல்கலைக்கழகம் மற்றும் கால்மர் கல்லூரிகளை இணைத்து லின்னேயஸ் பல்கலைக்கழகம் ஆகச் சுவீடன் பாராளுமன்றம் மூலம் 1 ஜனவரி 2010 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் இரட்டைப்பூ பேரினம் (லின்னெயா; ''Linnaea''), நிலவு பள்ளம் (லின்னெ; ''Linné'') மற்றும் கோபால்ட் சல்பைட்டு தாது (லின்னைட்; ''Linnaeite'') ஆகியவைக்கு லின்னேயஸ் என்று பெயரிடப்பட்டது.
 
=== இருசொல் பெயரிடுவதன் இன்றியமையாமை ===
உயிரினங்களின் பெயர்களைப் பொதுப்பெயரிட்டு அழைத்து அறியப்படும் நடைமுறையானது வழக்கத்தில் இருந்து வந்தது. இந்தப் பொதுப்பெயர்கள் இட்டு வழங்கும் முறைகளால் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறான குழப்பங்கள் நீடித்து வந்தன. இந்நடைமுறை உலகத்தார் அனைவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாததாகக் காணப்பட்டது. இத்தகைய குறைபாடுகளைக் களைவதற்காக உயிரினங்களுக்கு அறிவியல் முறைப்படி பெயரிடும் முறை உருவானது. இது உலகளவிலும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கரோலஸ் லின்னேயஸ் உயிரினங்களுக்கு தற்போதும் நடைமுறையிலுள்ள [[இருசொற் பெயரீடு|இருசொற் பெயரீட்டு முறை]]யை உருவாக்கினார்.<ref>{{cite book | title=அறிவியல் ஏழாம் வகுப்பு முதல் பருவம் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை,சென்னை. | year=2016 | pages=ப. 161}}</ref> கரோலஸ் லின்னேயசின் இத்தகைய வகைப்பாட்டியல் முறை, உயிரினங்களுக்குப் பெயரிடவும், அவற்றை வகைப்படுத்திடவும், ஒப்பீடுகள் மேற்கொண்டு வேறுபாடுகளை அறிந்திடவும் பயன்படுகிறது.
 
=== இருசொல் பெயரிடும் முறையின் அடிப்படை விதிகள் ===
# உயிரினங்களின் அறிவியல் பெயர் இலத்தின் மொழி அல்லது இலத்தின் மொழி மொழிபெயர்ப்பு ஆகியவற்றால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
# பேரினப் பெயரில் இடம்பெற்றிருக்கும் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தில் எழுதப்படுதல் இன்றியமையாதது.
வரிசை 82:
# இப்பெயர்களைக் கையினால் எழுதும்போது அப்பெயர்களுக்கு அடியில் அடிக்கோடிட்டு எழுதப்பட வேண்டும்.<ref name="ReferenceA"/>
 
=== சில இருசொல் பெயர்கள் ===
 
==== தாவரவியல் பெயர்கள் ====
* அரிசி - ஒரைசா சட்டைவா
* உருளைக்கிழங்கு - சொலானம் டியுபரோசம்
வரிசை 97:
* பாம்பு - நாஜா நாஜா
 
=== இருசொல் பெயரிடும் முறையின் படிநிலைகள் ===
உயிரின வகைப்பாட்டியலின் மிகப்பெரிய படிநிலை உலகம் ஆகும். இதன் கீழ் பல்வகைப்பட்ட துணை அலகுகள் பல்வேறு படிநிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகைப்பாட்டியலின் பல்வேறு படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என்பதாகும். இந்த பூமியின் மேற்பரப்பில் வாழும் அனைத்துவித உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவான பண்புகளின் அடிப்படையில் உயிரினங்கள் பல்வேறு சிறு அலகுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அலகிலும் உள்ள உயிரினங்கள் அவற்றிற்கு முந்தைய அலகு உயிரிங்களிளிருந்து உருவாகியிருக்கக் கூடும். இவ் வகைப்பாட்டியலின் கீழ்நிலை அலகு சிற்றினம் ஆகும்.<ref>{{cite book | title=அறிவியல் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி மூன்று | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக் கல்வித் துறை, சென்னை-6. | year=2017 | pages=ப. 4}}</ref>
 
வரிசை 112:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:1707 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கரோலஸ்_லின்னேயஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது