ச. சாமிவேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 130:
 
2000 ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பு படுத்தப்பட்டன.<ref>[http://www.themalaysianinsider.com/index.php/malaysia/19376-samy-vellu-in-the-case-of-the-missing-files-and-government-funds More to come on missing millions ] {{Webarchive|url=https://web.archive.org/web/20090303214756/http://www.themalaysianinsider.com/index.php/malaysia/19376-samy-vellu-in-the-case-of-the-missing-files-and-government-funds |date=2009-03-03 }} New Straits Times, 23 February 2009.</ref>
 
அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன.<ref>[http://www.indianmalaysian.com/sami_bankaccount.htm http://www.indianmalaysian.com/sami_bankaccount.htm]</ref>
 
===அரசியல் ஆய்வாளர்கள் கருத்து===
 
மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்திய பிரச்னைகளில் இவர் தலையிட்டுத் தீர்வு காண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர்.
 
[[நவம்பர் 25]], [[2007]]ல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன.<ref>[http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=757&Itemid=56 மலேசிய தமிழ்ச் சமூகத்தின் எதிர்ப்பு அலைகள் விஸ்வரூபம் எடுத்தன]</ref>. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது.
 
===மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பு அலை===
 
பின்னர், [[மார்ச் 8]], [[2008]]ல் நடந்த பொதுத் தேர்தலில் [[சுங்கை சிப்புட்]] நாடாளுமன்றத் தொகுதியில் [[மக்கள் நீதிக்கட்சி]]யின் சார்பாகப் போட்டியிட்ட மரு. [[ஜெயக்குமார் தேவராஜ்|ஜெயக்குமார் தேவராஜிடம்]] சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார்.
 
இவர் தலைமையில் இயங்கிய மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த [[பாரிசான் நேசனல்]], மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது. ம.இ.கா. பாரிசான் நேசனல் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ச._சாமிவேலு" இலிருந்து மீள்விக்கப்பட்டது