கட்டளைக் கலித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கட்டளைக் கலித்துறை''' என்பது [[கலித்துறை]]யின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு '''எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி [[யாப்பு]]''' என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். [[காரைக்கால் அம்மையார்]] தான் இவ்வகையை முதலில் பயன்படுத்தினார் என்பர்.
 
எழுத்தெண்ணிப் பாடுகிற பொழுது [[ஒற்றெழுத்து]]கள் (புள்ளி வைத்த எழுத்துகள்) அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது [[உயிர்மெய் எழுத்துகள்|உயிர்மெய் எழுத்துகளை]] மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி [[நேரசை]]யில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், [[நிரையசை]] கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கட்டளைக்_கலித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது