"செங்கிஸ் கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

324 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
இதற்கிடையில், செங்கிஸ் கான் அவரது மூன்றாவது மகனான ஒகோடி கானை தனது இராணுவப் படையெடுப்புக்கு முன்னரே தனது வாரிசாக தேர்ந்தெடுத்தார். பின்னர் பின்வரும் கான்களும் அவரது நேரடி வம்சாவளியினராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேற்கு நோக்கிச் சென்று குவாரசமியாவைப் போர்புரியும்போது, சின் சீனாவில் உள்ள அனைத்து மங்கோலியப் படைகளின் தளபதியாக செங்கிஸ் கான் தனது மிக நம்பகமான தளபதிகளில் ஒருவரான [[முகாலி]]யைத் தேர்ந்தெடுத்து இருந்தார்.
 
மிக உயரமான இரு புத்தர் சிலைகளைக் கொண்ட ஆப்கானித்தான் நகரமான பாமியானில் சகதை கானின் மகனான முத்துகன் போரில் உயிரிழந்தார். செங்கிஸ் கானின் கோபத்திற்கு அந்நகர் உள்ளானது. யாரும் அழவில்லை. மாறாக உணர்வுகளைக் கோபமாகப் போரில் காண்பித்தனர். வளமான அப்பகுதி பாலைவனமானது. மங்கோலியத் தாக்குதலுக்கு உண்டான அந்த இடம் இன்றும் உள்ளூர் அளவில் "சபிக்கப்பட்ட பகுதி" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book| last = மைக்கேல்| first = ப்ரவ்டின்| title = மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு| url = https://archive.org/details/in.ernet.dli.2015.325365| publisher=ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ்| year = 1940| page = 193-194| isbn = 978-1-138-53687-6}}</ref> அந்த இடத்திற்கு 'அலறல்களின் நகரம்' என்று மற்றொரு பெயரும் உண்டு.
 
[[படிமம்:Shahr-e-Gholghola.jpg|400px|thumb|ஆப்கானித்தானின் "அலறல்களின் நகரம்".]]
 
அரல் கடல் முதல் பாரசீகப் பாலைவனம் வரை உள்ள பகுதிகள் பயந்து கிடந்தது. கிசுகிசுப்பில் மட்டுமே தப்பிப்பிழைத்தவர்கள் "அந்த நபரைப்" பற்றி பேசினார்கள். சத்தமாகப் பேசப் பயந்தனர். ஒரு மங்கோலியக் குதிரைவீரன் தனி ஆளாக ஒரு கிராமத்திற்குச் சென்று பலரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய மாடுகளை ஓட்டிச் செல்லலாம். ஒருவர் கூட எதிர்த்து கைகூடத் தூக்க மாட்டார்களாம். அந்த அளவிற்கு எதிர்ப்பதற்கான சக்தியை மக்கள் இழந்திருந்தனர்.
6,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3278079" இருந்து மீள்விக்கப்பட்டது