"ராவணன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

238 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''''ராவணன்''''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். [[சுஹாசினி|சுகாசினி மணிரத்தினம்]] இதற்கு உரையாடல் எழுதினார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[பிரித்விராஜ் சுகுமாரன்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] என்று மேலும் பலர் நடித்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், ராவன் என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.
 
== திரைக்கதை ==
வீராவின் தங்கைக்கும் அவளுடன் கல்லூரியில் படித்தவனுக்கும் திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து தேவ் வீராவை சுட, கழுத்தில் குண்டு காயத்துடன் வீரா தப்பிக்கிறான். அவன் தங்கை வெண்ணிலாவை விசாரணைக்கு தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் [[பாலியல் வன்முறை]]க்கு உள்ளாக்குகின்றார்கள். சில நாட்கள் கழித்து வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு, கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.
 
இதனால், காவல்துறை அதிகாரி தேவைப் பழிவாங்க, அவன் மனைவி ராகினியை([[ஐஸ்வர்யா ராய்]]) கடத்திப் போகிறான் வீரா. ராகினியுடன் காட்டிற்குள் வந்த அனைவரையும் தாக்கிவிட்டு அவளை கடத்திச்செல்கிறான் வீரா. ஆரம்பத்தில் வீராவை வெறுக்கும் ராகினி, அவன் தங்கைக்கு நேர்ந்த சோகம், அதற்கு தன் கணவனும் ஒரு காரணம் என்பதை அறிந்து அமைதியாகிறாள். அவள் மீது வீராவுக்கு மோகம் பிறக்க, அதை அவளிடமே சொல்கிறான்.
 
ராகினியை மீட்க வரும் காவல்துறைக்கும், வீராவின் ஆட்களுக்கும் நடக்கும் சண்டை நீண்டுகொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் வீராவின் தம்பி சமாதானம் பேச செல்கிறான். ஆனால் வீராவின் தம்பியையும் தேவ் கொல்கிறார். இதைத் தொடர்ந்து வரும் சண்டையில் வீராவும் காவல்துறையினரும் கடுமையாக மோதுகிறார்கள். வீராவின் தாக்குதலில் காவல்துறை கடும் தோல்வியை சந்திக்கிறது. கடைசியில், ராகினிக்காக அவரது கணவரான தேவைக் கொல்லாமல் விடுகிறான் வீரா. ராகினியையும் விடுவித்து அனுப்பி விடுகிறான்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3280602" இருந்து மீள்விக்கப்பட்டது