யூ.எசு. ஓப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 22:
==வரலாறு==
[[File:Newport Tennis Hall of Fame.jpg|left|thumb|300px|நியூபோர்ட் கேசினோ டென்னிஸ் மைதானம்]]
இப்போட்டி தொடக்கக் காலத்தில், குமுகத்தில் (சமூகத்தில்) உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு [[றோ தீவு|றோட் தீவிலுள்ள]] (Rhode Island) நியூப்போர்ட் நகரின் நியூப்போர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிசுச் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை அறைகூவல் முறையை (challenge system) கடைபிடித்ததுகடைபிடித்து, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் [[நியூயார்க்|நியூயார்க்கின்]] பாரஃசுட்டு ஃகில் (Forrest Hill) பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி [[பிலடெல்பியா]] நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றாது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஃசுட்டு ஃகில் பகுதிக்கு திரும்பியது.
 
அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/யூ.எசு._ஓப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது