நாதம் (மங்கோலிய விழா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''நாதம்''' ({{lang-mn|Наадам}}, பாரம்பரிய மொங்கோலியம்: {{MongolUnicode|ᠨᠠᠭᠠᠳᠤᠮ}}''நயதும்'', ''பொருள் "விளையாட்டுக்கள்"'') என்பது மங்கோலியாவில் கொண்டாடப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:01, 18 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

நாதம் (மொங்கோலியம்: Наадам, பாரம்பரிய மொங்கோலியம்: ᠨᠠᠭᠠᠳᠤᠮநயதும், பொருள் "விளையாட்டுக்கள்") என்பது மங்கோலியாவில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியத் திருவிழா ஆகும். மங்கோலியாவில் இத்திருவிழா "எரீன் குர்வன் நாதம்" (эрийн гурван наадам) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் "ஆண்களின் மூன்று விளையாட்டுக்கள்" என்பது ஆகும். அந்த மூன்று விளையாட்டுக்கள் மங்கோலிய மல்யுத்தம், குதிரைப் பந்தயம், மற்றும் வில்வித்தை ஆகியவை ஆகும். கோடை காலத்தின் மத்தியில் இத்திருவிழா மங்கோலியா முழுவதும் நடத்தப்படுகிறது. தற்போது வில்வித்தையில் பெண்களும், குதிரைப் பந்தயத்தில் சிறுமிகளும் பங்கேற்கத் தொடங்கியிருக்கின்றனர். எனினும் மல்யுத்தத்தில் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வதில்லை.

2010ஆம் ஆண்டு யுனெஸ்கோ இத்திருவிழாவைத் தனது மனிதக் கலாச்சாரப் பாரம்பரியத்தின் பட்டியலில் ஒன்றாகப் பொறித்தது.[1][2][3]

உசாத்துணை

  1. "Airag". பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  2. "the khuushuur". mongolfood.info. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  3. "the biyelgee". 13 May 2013. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதம்_(மங்கோலிய_விழா)&oldid=3282325" இலிருந்து மீள்விக்கப்பட்டது