மீனல் ரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
சிறுமியாக ஓர் மருத்துவராக விரும்பினார்.எட்டாம் அகவையில் தொலைக்காட்சியில் விண்வெளி குறித்த நிகழ்வொன்றில் மனம் மாறி இத்துறையில் ஆர்வம் கொண்டார்.<ref name="MarsMission">{{Cite web|url=https://www.shethepeople.tv/news/tech-women-minal-sampath-worked-on-indias-mars-mission/|title=Tech Women: Minal Sampath worked on India's Mars Mission|website=www.shethepeople.tv|language=en-US|access-date=2018-04-28}}</ref> தனது படிப்பின்போது உடன் மாணவர்கள் கிடைக்கப்போகும் சம்பளத்தைக் கொண்டே தங்கள் பணிவாழ்வை அமைத்துக் கொள்ளும் போக்கைக் கண்டார். இருப்பினும் அவர் முழுமையான கல்வி பெறுவதையே நாட்டமாகக் கொண்டார். 1999இல் [[குஜராத் பல்கலைக்கழகம்|குசராத் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றார்.<ref name=":2" /> தொலைத் தொடர்பில் [[விண்வெளிப் பயன்பாடுகள் மையம்]] பி.டெக் பட்டம் வழங்கியது; இணையாக நிர்மா தொழிற்நுட்பக் கழகத்தில் [[மின்பொறியியல்|மின்னியல், தொலைத்தொடர்பில்]] தங்கப் பதக்கம் வென்றார்.
== பணிவாழ்வு ==
மீனல் தமது பணிவாழ்வை [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்]] [[தொடர்புப் பொறியியல்|செயற்கைக்கோள் தொடர்பியல் பொறியாளராகத்]] துவங்கினார்; பின்னர் விண்வெளிப் பயன்பாடுகள் மையத்திற்கு மாறினார். [[செவ்வாய் சுற்றுகலன் திட்டம்|செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில்]] பணியாற்றிய 500 அறிவியலாளர்களிலும்<ref>{{Cite news|url=https://www.bbc.com/news/world-asia-25989262|title=Indian woman's space mission|date=2014-02-07|work=BBC News|access-date=2018-09-17|language=en-GB}}</ref> பொறியாளர்களிலும் ஒருவராக பங்கேற்றார். இத்திட்டத்தின் அமைப்பு பொறியாளராக சுற்றுக்கலன் எடுத்துச் சென்ற உணரிகளை சோதிக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவினார்.<ref name="WIRED"/> இரண்டாண்டுகளாக எந்தவொரு பணி விடுப்பும் எடுக்காமல் திட்டம் சிறப்பாக நிறைவுற பாடுபட்டார்.<ref name="MarsMission" />
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மீனல்_ரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது