"முதுகுளத்தூர் கலவரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
 
== நீதி விசாரணை ==
[[இம்மானுவேல் சேகரன்|இம்மானுவேலைக்]] கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய, கீழ்த்தூவல் கிராமத்துக்கு [[தமிழ்நாடு காவல்துறை|காவலர்]] சென்றனர். அங்கு காவல்துறை [[துப்பாக்கி]]ச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஐந்துஐந்து [[மறவர்]] சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக தெரிகிறது. ஆனால் ஐந்து பேரைப் பிடித்து அடித்து, [[கை]]களையும், [[கண் (உடல் உறுப்பு)|கண்]]களையும் கட்டி, குளக்கரையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றனர் என்று கீழ்த்தூவல் மக்கள் குற்றம் சாட்டினர்.<ref name="maalaimalar"/> இதைப் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு, வருவாய்த் துறை வாரியத்தின் உறுப்பினர் எஸ். வெங்கடேசுவரனுக்கு அரசாங்கம் உத்தரவிட்டது. அவர் [[கீழத்தூவல்]]க்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அரசாங்கத்திடம் அவர் அறிக்கை கொடுத்தார். இதில் ஐந்து பேர் மாண்டனர். அவர்களை கட்டி வைத்து தான் சுட்டுக் கொல்லபட்டார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையை எதிர்க்கட்சியினர் ஏற்றனர். இது தொடர்பாக, சட்டசபையில் அப்போதைய [[தமிழக முதல்வர்]] [[காமராசர்]] தலைமையிலான மந்திரிசபை மீது [[அக்டோபர் 28]], [[1957]] ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத் தீர்மானத்தை [[பொதுவுடைமை|கம்யூனிசத்]] தலைவர் எல். கல்யாணசுந்தரம் கொண்டு வந்தார். அப்போதைய [[திமுக]] தலைவர் [[அண்ணாத்துரை|அண்ணா]] பேசும்போது, [[முதுகுளத்தூர்]] கலவரத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை கண்டு கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தெரியும் என்று வலியுறுத்தினார். விவாதத்துக்கு நிதி அமைச்சர் [[சி. சுப்பிரமணியம்]] பதில் அளிக்கையில், ஐந்து [[மறவர்]]களின் கைகளைக் கட்டி காவல்துறை சுட்டுக்கொன்றதாக கூறப்பட்ட புகாரை ஒப்புக்கொண்டார். முடிவில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 28 பேர்களும், எதிராக 146 பேர்களும் வாக்களித்தனர். தி.மு.கழகம் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. <ref name="maalaimalar"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3282988" இருந்து மீள்விக்கப்பட்டது