மீனல் ரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பணிவாழ்வு: *விரிவாக்கம்*
வரிசை 20:
== பணிவாழ்வு ==
மீனல் தமது பணிவாழ்வை [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்]] [[தொடர்புப் பொறியியல்|செயற்கைக்கோள் தொடர்பியல் பொறியாளராகத்]] துவங்கினார்; பின்னர் விண்வெளிப் பயன்பாடுகள் மையத்திற்கு மாறினார். [[செவ்வாய் சுற்றுகலன் திட்டம்|செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தில்]] பணியாற்றிய 500 அறிவியலாளர்களிலும்<ref>{{Cite news|url=https://www.bbc.com/news/world-asia-25989262|title=Indian woman's space mission|date=2014-02-07|work=BBC News|access-date=2018-09-17|language=en-GB}}</ref> பொறியாளர்களிலும் ஒருவராக பங்கேற்றார். இத்திட்டத்தின் அமைப்பு பொறியாளராக சுற்றுக்கலன் எடுத்துச் சென்ற உணரிகளை சோதிக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவினார்.<ref name="WIRED"/> இரண்டாண்டுகளாக எந்தவொரு பணி விடுப்பும் எடுக்காமல் திட்டம் சிறப்பாக நிறைவுற பாடுபட்டார்.<ref name="MarsMission" />
 
ரோகித் [[சந்திரயான்-2|சந்திரயான் - II]] போன்ற வருங்காலத் திட்டங்களுக்கு தலைமைப் பொறியாளராகவும்<ref>{{Cite news|url=https://www.bustle.com/p/8-women-in-stem-who-are-changing-the-space-game-7999206|title=8 Inspiring Women Who Are Changing The Space Game|last=Thorpe|first=J.R.|date=17 February 2018|work=Bustle|access-date=2018-04-02|language=en}}</ref> திட்ட மேலாளராகவும் பணியாற்றினார்.<ref>{{Cite web|url=http://corporatecitizen.in/v2-issue21/women-power-moms-of-mars-mission.html|title=WOMAN POWER : MOMS of Mars Mission|website=corporatecitizen.in|access-date=2018-03-08}}</ref> தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் துணை திட்ட இயக்குநராக உள்ளார்.<ref>{{Cite web|url=http://newslantern.com/magnetic-maharashtra-2018-summit-women-have-more-opportunities-in-industrial-sector/|title=Magnetic Maharashtra 2018 Summit : Women have more opportunities in industrial sector – Newslantern|website=newslantern.com|language=en-US|access-date=2018-04-06}}</ref> இந்தத் தேசிய விண்வெளி முகமையின் முதல் பெண் இயக்குநராக பொறுப்பேற்க உழைத்து வருகிறார்.<ref>{{Cite news|url=https://www.storypick.com/isro-women-scientists/|title=8 Hardworking ISRO Women Scientists Who Are Breaking The Space Ceilings With Their Work|date=2017-02-16|work=Storypick|access-date=2018-04-28|language=en-GB}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மீனல்_ரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது