"மு. வரதராசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==பேராசிரியராகப் பணி==
[[1939]] -ஆம் ஆண்டில் [[பச்சையப்பன் கல்லூரி]] விரிவுரையாளர் பணி நிமித்தம் [[சென்னை]] சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். [[1944]] -இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில்
ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
 
[[1948]] -இல் [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தின்]] மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாகமுதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[1939]] -இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. [[1961]] வரை அங்குஅங்குப் பணியாற்றினார். [[1945]] -இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே [[1948]]-ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக,பகுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
 
பின்னர் [[1971]] -இல் [[மதுரை பல்கலைக்கழகம்|மதுரைப் பல்கலைக்கழக]]த் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.
 
மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். [[1972]] ஆம் ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.
 
===மாணவர்களுக்கு உதவி===
மாணவர்களுக்குத் தேடிச் சென்று உதவும் குணம் கொண்டவர். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் கட்ட இயலாத மாணவர்களுக்குமாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்தவர். நோயுற்ற போதும் உதவுவார்.இவர் செய்யும் உதவிகள் இவர் தம் துணைவியாருக்குக் கூடத் தெரியாது. மேலும் உதவி பெறும் மாணவரது நண்பர்களும் அறியாவண்ணம் உதவிபெறும் மாணவருக்குத் தடைவிதித்து விடுவார்.<ref name="SRV"/>
 
==கல்வித்துறை ஆய்வு மாநாடுகள்==
3,673

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3284910" இருந்து மீள்விக்கப்பட்டது