ஐதராபாத் இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 61:
இந்தியப் பிரிவினையின்போது நாட்டின் பல்வேறு மன்னராட்சிகளுக்கும் இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ சேரும் வாய்ப்பை பிரித்தானிய அரசு வழங்கியது. நிசாம் ஐதராபாத்தை தனிநாடாக வைத்திருக்க விரும்பினார். ஆனால் இந்திய ஒன்றியத் தலைவர்கள் தங்கள் நாட்டுப் பகுதியின் மத்தியில் தனி நாடொன்று - அதிலும் தங்களுக்கு எதிரான - இருப்பதை விரும்பவில்லை. மற்ற 565 மன்னராட்சிகளில் பெரும்பாலானவை இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தன. எனவே இந்திய அரசு ஐதராபாத்து பகுதியை தங்களுடன் இணைத்துக் கொள்ள, தேவையானால் கட்டாயமாக, விரும்பியது.
 
செப்டம்பர் 1948இல் அப்போதைய [[இந்திய துணைப் பிரதமர்|துணைப் பிரதமரும்]] [[இந்தியாவின் உள்துறை அமைச்சர்|உள்துறை அமைச்சருமான]] [[வல்லபாய் பட்டேல்|சர்தார் வல்லபாய் படேல்]] தலைமையில் ''[[போலோ நடவடிக்கை]]'' என்ற இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. [[இந்தியப் பாதுகாப்புப் படைகள்]] இராச்சியத்தினுள் நுழைந்து நிசாம் ஆட்சியை கைப்பற்றின.<ref>{{cite web|url=http://indianarmy.nic.in/Site/FormTemplete/frmTempSimple.aspx?MnId=K/KtVO4bQNg=&ParentID=a2GSpnDbruI=|title=Official Website of Indian Army|publisher=|accessdate=13 September 2014}}</ref><ref>{{cite web|url=http://www.hyderabad.co.uk/policeaction.htm|title=Hyderabad on the Net|work=hyderabad.co.uk|access-date=2015-09-26|archive-date=2018-12-24|archive-url=https://web.archive.org/web/20181224193046/http://www.hyderabad.co.uk/policeaction.htm|dead-url=dead}}</ref>
 
இந்தியப் படைகளால் கைப்பற்றப்படும்வரை ஏழு நிசாம்கள் ஐதராபாத்தை இரு நூற்றாண்டுகளுக்கு ஆண்டுள்ளனர். அசாஃப் ஜாஹி மன்னர்கள் [[இலக்கியம்]], [[கலை]], [[கட்டிடக்கலை]], [[பண்பாடு]], நகைகள் வடிவமைப்பு , உணவுக்கலை ஆகியவற்றை வளர்த்துள்ளனர். ஐதராபாத்து முசுலீம்களின் அடையாளமாக விளங்கும் பாரசீகக் கலை, [[பாரசீகக் கட்டிடக்கலை]], மற்றும் பாரசீகப் பண்பாட்டை நிசாம்கள் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தனர். தங்கள் ஆட்சியில் மின்சாரத்தை அறிமுகப்படுத்தினர்; தொடருந்து சேவைகளை கொணர்ந்தனர்; சாலைகளை மேம்படுத்தினர். தொலைத்தொடர்பு, பாசன வசதிகள், ஏரிகள் ஆகிய கட்டமைப்புக்களை உருவாக்கினர். கடைசி நிசாம் அவரது பெரும் செல்வத்திற்காகவும் நகை சேமிப்புக்காகாவும் அறியப்படுகின்றார்; உலகின் மிகப் பெரும் செல்வந்தராக தனது ஆட்சியின் முடிவின்போது அவர் விளங்கினார்.<ref>{{cite web|url=http://www.instash.com/top-10-richest-men-of-all-time|title=Top ten richest men of all time|work=inStash|accessdate=13 September 2014}}</ref> ஐதராபாத்திலுள்ள முதன்மையான பொதுக் கட்டிடங்களில் பல அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே. கல்வி, அறிவியலை பரப்புமுகமாக [[உசுமானியா பல்கலைக்கழகம்|உசுமானியா பல்கலைக்கழகத்தையும்]] நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐதராபாத்_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது