பகிர்வுப் பெற்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

22:08, 24 செப்டெம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

பகிர்வுப் பெற்றோர்(Shared parenting), பகிர்வு வாழ்விடம், இணைந்த இல்லம், பகிர்வு காப்பு அல்லது இணைந்த மக்கட் பாதுகாப்பு திருமண முறிவு அல்லது பிரிவு ஏற்பட்ட பின்னர் பெற்றோர் இருவரும் தம் மக்களை பாதுகாக்கும் முறைமை ஆகும். மக்களைப் பேணும் நேரம் இருவரிடையேயும் சமமாக அல்லது ஏறத்தாழ சமமாக வழங்கப்படுகின்றது.[1] இத்தகைய முறைமை குழந்தைகளுக்கு இரு பெற்றோர்களிடையேயும் அண்மித்து இருக்கவும் அன்பைப் பெறவும் உரிமை உள்ளவர்கள் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு குழந்தையும் தன்னுடைய பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கக் கூடாது என்பதே இதன் இலக்காகும்.

பகிர்வுப் பெற்றோர் என்ற சொல்லாக்கம் மணமுறிவு, பிரிந்து வாழ்தல் மற்றும் இணைந்து வாழாத பெற்றோர்களுக்கானது; மாறாக, பகிர்ந்தப் பேணல் திருமணம் என்பது குழந்தை வளர்ப்பு, வருமான ஈட்டம், வீட்டு வேலைகள், மனமகிழ்வு நேரம் ஆகிய நான்கையும் சமமாக பகிர்ந்து கொண்டு திருமணம் மேற்கொள்வதாகும். பகிர்வுப் பெற்றோருக்கு எதிராக பிரிந்த காப்பு அமையும்; இதில் சில குழந்தைகள் முதன்மையாக அன்னையுடனும் அவர்களின் சில உடன்பிறப்புகள் முதன்மையாக தந்தையுடனும் வாழ்வதாகும்.

பறவைக் கூடு காப்பு என்ற சிறப்பு வகை பகிர்வுப் பெற்றோர் முறையில் குழந்தைகள் எப்போதும் தங்கள் இல்லத்திலேயே வாழ்ந்திருக்க, அன்னையும் தந்தையும் முறை எடுத்து அவர்களுடன் தங்குவதாகும். இத்தகைய முறை நெடுங்கால ஏற்பாடாக கொள்வது கடினமாக இருக்கும்; மூன்று இல்லங்களை பராமரிக்க வேண்டியிருப்பதால் செலவு கூடுதலாகும். எனவே இத்தகைய முறை தற்காலிகமாக, பெற்றவரில் ஏதேனும் ஒருவர் தகுந்த இல்லத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வரை, மேற்கொள்ளப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்

  1. "Shared Custody Definition". Duhaime's Law Dictionary.
  2. Duhaime's Law Dictionary, Bird's Nest Custody Definition
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகிர்வுப்_பெற்றோர்&oldid=3286686" இலிருந்து மீள்விக்கப்பட்டது