எகுலிங்கு யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 21:
 
== பின்புலம் ==
1206ஆம்1206 ஆம் ஆண்டு [[செங்கிஸ் கான்|தெமுசின்]] மங்கோலியாவில் இருந்த அனைத்துப் பழங்குடியினங்களையும் ஒன்றுபடுத்தினார். தனது ஆட்சியைக் கொண்டு வந்தார். "செங்கிஸ் கான்" என்ற பட்டம் பெற்றார். உலகை வெல்ல வேண்டும் என்ற [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] குறிக்கோளுக்கு ஒரு பெரிய இடைஞ்சலாக வடக்கு சீனாவில் இருந்த [[சுரசன்கள்|சுரசன்களால்]] ஆளப்பட்ட [[சின் வம்சம் (1115–1234)|சின் அரசமரபானது]] திகழ்ந்தது. முற்காலத்தில் சின் அரசமரபானது பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு பல்வேறு மங்கோலிய பழங்குடி இனங்களை பிரித்துத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. எனினும் தங்களது சூழ்ச்சி நீண்ட காலத்திற்கு பயனளிக்காது என்பதை உணர்ந்த அவர்கள் மங்கோலிய ஆபத்தை ஒரே படையெடுப்பில் ஒழித்து விடும் நோக்கத்தோடு போருக்குத் தயாராக ஆரம்பித்தனர். பேரரசர் சங்சோங்கின் ஆட்சியில் ஒரு தொடர்ச்சியான பாதுகாப்பு கட்டமைப்புகளை சுமார் 300 கிலோ மீட்டருக்கு தங்களது வடக்கு எல்லையில் சின் அரசமரபானது அமைத்தது. இது சில நேரங்களில் "சின் அரசமரபின் பெருஞ்சுவர்" என்று அழைக்கப்படுகின்றது.
 
முன்னதாக 1204 ஆம் ஆண்டு ஒங்குடு என்று அழைக்கப்பட்ட ஒரு மங்கோலிய பழங்குடி இனத்தை செங்கிஸ் கான் அடிபணிய வைத்தார். சின் அரசமரபின் வடக்கு எல்லையைப் பாதுகாப்பதற்கு ஒங்குடு இனத்தவர் உதவி செய்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் தனது மகளை ஒங்குடு பழங்குடியினத் தலைவரின் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததன் மூலம் செங்கிஸ் கான் ஒரு கூட்டணியை ஏற்படுத்தினார். மங்கோலியர்கள் இன் மலைத் தொடருக்கு வடக்கே இருந்த பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சீனாவுக்கு எதிரான இராணுவப் படையெடுப்புக்குத் தேவையான பொருட்களைச் சேமிக்க ஆரம்பித்தனர். சில சுரசன் இனத்தவர்களைத் தங்கள் பக்கம் அணிசேரவோ அல்லது சரணடைய வைக்கவோ ஈர்க்கவும் தூண்டவும் செய்தனர். பேரரசர் சிங்சேங் (வன்யன் யோங்ஜி) மங்கோலிய ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டார். மங்கோலியர்களுக்கு எதிராக இருந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தவறினார். மங்கோலியர்களை விட சின் அரசமரபானது மிகுந்த சக்தி வாய்ந்தது என்கிற மாயையை நம்பிக் கொண்டிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எகுலிங்கு_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது