சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 20:
 
===படவெழுத்துக்கள்===
முத்திரைகளின் முன்புறத்தில் காணப்படும் செதுக்கல்களுள் முக்கியமான ஒன்று [[படவெழுத்து]] வரி ஆகும். இவை பெரும்பாலும் குறைந்த நீளம் கொண்டவை. ஒன்று அல்லது இரண்டு வரிகளாக அமைந்தவை. இது இந்த முத்திரைக்கு உரியவரின் பெயராக இருக்கலாம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஏறத்தாழ 400 வகையான வெவ்வேறு படவெழுத்துக் குறிகள் இனங்காணப்பட்டு உள்ளன.<ref>[{{Cite web |url=http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/asia/s/indus_seal.aspx |title=Indus Seal பிரித்தானிய அருங்காட்சியகத் தளத்தில்] |access-date=2013-01-24 |archive-date=2013-05-29 |archive-url=https://web.archive.org/web/20130529094631/http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/asia/s/indus_seal.aspx |dead-url=dead }}</ref> இவ்வெழுத்துக்கள் அக்காலத்தில் பேசப்பட்ட [[மொழி]]யை அல்லது மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டவை என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும், இவற்றைக் கண்டுபிடித்து 130 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்மொழி அல்லது மொழிகள் எவை என்று கண்டறிய முடியவில்லை என்பதுடன், அக் குறியீடுகளையும் வாசித்து அறிந்துகொள்ள முடியவில்லை. அண்மையில் இது குறித்து ஆய்வு செய்த சில ஆய்வாளர்கள் இவை எந்த மொழியையும் எழுதுவதற்கான எழுத்துக்கள் அல்ல என்னும் கருத்தை முன்வைத்துள்ளனர். இவர்களுடைய கருத்துப்படி இவை சமய, அரசியல், சமூகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மொழி சார்பற்ற குறியீடுகளே. பல மொழிகளைப் பேசும் மக்களை இலகுவாகக் கட்டுப்படுத்துவதற்காகச் சிந்துவெளியில் இக்குறியீட்டு முறையைக் கையாண்டிருக்கலாம் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.<ref>[http://www.safarmer.com/fsw2.pdf Steve Farmer,Richard Sproat,Michael Witzel ''The Collapse of the Indus-Script Thesis: The Myth of a Literate Harappan Civilization''.]</ref>
 
==சிறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது