த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
இதற்கிடையே கணித வல்லுநர் இயான் மால்கம், ஹேமன்டைச் சந்திக்கிறார். ''ஈஸ்லா நுப்லாரிலிருந்த ஜுராசிக் பார்க் தொன்மாக்கள், முதலில் ஈஸ்லா சோர்னாவில்தான் உருவாக்கப்பட்டன. அத்தீவு பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சூறாவளியின் போது கைவிடப்பட்டது'' என ஹேமன்ட் விளக்குகிறார். மேலும் அத்தீவுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்குள்ள தொன்மாக்களை ஆவணப்படுத்தினால் அங்கு நிகழவிருக்கும் மனிதக் குறுக்கீட்டைத் தடுக்கவியலும் என அவர் நம்புகிறார். அக்குழுவின் உறுப்பினரும் தன் தோழியுமான [[தொல்லுயிரியல்|தொல்லுயிரியலாளர்]] சாரா ஹார்டிங் ஏற்கனவே அங்கு சென்றிருப்பதை அறியும் மால்கம் (அவரை மீட்டெடுக்கும் ஒரே நோக்கத்துடன்) ஈஸ்லா சோர்னாவுக்குச் செல்ல ஒப்புகிறார்.
 
பின் அவர் தனது அணியினரான எட்டி கார் மற்றும் நிக் வான் ஓவென் ஆகியோருடன் ஈஸ்லா சோர்னாவை அடைந்து சாராவைக் கண்டுபிடிக்கிறார். மேலும் இவர்கள் தங்கள் டிரெய்லர் ஒன்றில் மால்கம்மின் மகள் கெல்லி மறைந்து வந்துள்ளதை அறிகின்றனர். இச்சமயம் லுட்லோ தலைமையிலான இன்ஜென் குழுவும் வந்திறங்கி அங்குள்ள தொன்மாக்களைச் சிறைப்பிடிக்கிறது. இவையனைத்தும் [[சான் டியேகோ]] நகரில் புதிதாக அமையவுள்ள கருப்பொருள் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்படுமென அறியும் மால்கம் குழுவினர், அன்றிரவு இன்ஜென் முகாமுக்குள் கமுக்கமாக நுழைந்து அவற்றை விடுவிக்கின்றனர். இவை அம் முகாமை முழுவதுமாக அழிக்கின்றன.
இச்சமயம் லுட்லோ தலைமையிலான இன்ஜென் குழுவும் வந்திறங்கி அங்குள்ள தொன்மாக்களைச் சிறைப்பிடிக்கிறது. இவையனைத்தும் [[சான் டியேகோ]] நகரில் புதிதாக அமையவுள்ள கருப்பொருள் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்படுமென அறியும் மால்கம் குழுவினர், அன்றிரவு இன்ஜென் முகாமுக்குள் கமுக்கமாக நுழைந்து அவற்றை விடுவிக்கின்றனர். இவை அம் முகாமை முழுவதுமாக அழிக்கின்றன.
 
இந்நிகழ்வுக்குச் சற்றுமுன் இன்ஜென் குழுவின் தலைமை வேட்டைக்காரர் ரோலன்ட் டெம்போ, ஒரு ஆண் '''[[டைரனொசோரசு|டைரனோசாரஸை]]''' (டி ரெக்ஸ்) அதன் குட்டியின் அழுகுரலைக் கொண்டு கவரத் திட்டமிட்டிருந்தார். முகாம் அழிந்தபின் அக் குட்டியை மீட்கும் நிக், டிரெய்லரில் சாராவுடன் இணைந்து அதன் உடைந்த காலைச் சீர்செய்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/த_லொஸ்ட்_வேர்ல்ட்:_ஜுராசிக்_பார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது