உரோமைப் பேரரசின் இறங்குமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 1:
[[File:Roman Empires 476AD.svg|thumb|250px|476இல்இருந்த மேற்கு உரோமைப் பேரரசும் [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு உரோமைப் பேரரசும்]]]]
 
'''உரோமைப் பேரரசின் இறங்குமுகம்''' என்பது [[எட்வார்ட் கிப்பன்|எட்வர்டு கிப்பனால்]] 1776இல் ஆக்கப்பட்ட ''உரோமைப் பேரரசின் இறங்குமுகமும் வீழ்ச்சியும்'' என்ற நூலில் விவரிக்கப்பட்ட ஓர் கருத்துரு ஆகும். 4வது-5வது நூற்றாண்டுகளில் [[உரோமைப் பேரரசு]]க்கு என்னவாயிற்று என்பதை இன்னமும் வரலாற்றியலாளர்கள் விவாதித்து வருகின்றனர். பல கருதுகோள்கள் ஆராயப்பட்டுள்ளன; இவை பெரும்பாலும் அரசியல், பொருளியல்நிலை, படைத்துறை மற்றும் பிற சமூக அமைப்புக்களின் பிளவுகளால் ஏற்பட்டதாக தீர்வு காண்கின்றன. காட்டுமிராண்டிகளின் படையெடுப்பு மற்றும் உள்நாட்டுத் துரோகிகளால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கருதுகின்றனர். இந்த வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய முற்பட்டதில் கிப்பன் முதலாமவர் இல்லை. அமெரிக்க அறிஞர் ''கிளென் போவெர்சாக்'' "18வது நூற்றாண்டிலிருந்து இந்த வீழ்ச்சி நம்மை ஈர்த்துள்ளது: இதுவே ஒவ்வொரு அரசு வீழ்ச்சிக்கும் மூல அடிப்படையாக மதிப்பிடப்படுகிறது; எனவே நமது அச்சங்களுக்கான அடையாளமாக உள்ளது." எனக் கூறியுள்ளார்.<ref>Bowersock, "The Vanishing Paradigm of the Fall of Rome" ''Bulletin of the American Academy of Arts and Sciences'' (1996) 49#8 pp 29-43 at p. 31.</ref> 1984இல் செருமன் பேராசிரியர் ''அலெக்சாந்தர் தெமாந்த்'' உரோமை வீழ்ச்சிக்கான 210 பல்வேறு காரணங்களை தொகுத்துள்ளார்.<ref>[http://crookedtimber.org/2003/08/25/decline-and-fall Alexander Demandt: 210 Theories], from Crooked Timber weblog entry August 25, 2003. Retrieved June 2005.</ref><ref>[http://www.utexas.edu/courses/rome/210reasons.html Alexander Demandt: 210 Theories] {{Webarchive|url=https://web.archive.org/web/20150316232650/http://www.utexas.edu/courses/rome/210reasons.html |date=2015-03-16 }}, Source: A. Demandt, ''Der Fall Roms'' (1984) 695. See also: Karl Galinsky in ''Classical and Modern Interactions'' (1992) 53-73.</ref>
 
இந்த இறங்குமுகம், பின்னோக்கிப் பார்க்கும்போது, நான்கு நூற்றாண்டுகளாக நிகழ்ந்துள்ளது; பரவலாக மேற்கத்திய உரோமைப் பேரரசின் கலைப்பு செப்டம்பர் 4, 476இல் நடந்ததாக கருதப்படுகிறது; செருமானிய குடித்தலைவன் ஓடொசர் [[உரோமைப் பேரரசர்கள்|கடைசி உரோமைப் பேரரசனான]] உரோமுலசு அகஸ்டசை அன்றுதான் முடியிறக்கச் செய்தான்.<ref>Arnaldo Momigliano, echoing the trope of the sound a tree falling in the forest, titled an article in 1973, "La caduta senza rumore di un impero nel 476 d.C." ("The noiseless fall of an empire in 476 AD").</ref> ஆனால் இந்த திகதியை பேரரசின் வீழ்ச்சி நாளாகக் கொள்ள முடியாது என சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கான காரணமாக [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு உரோமைப் பேரரசினால்]] அங்கீகரிக்கப்பட்ட யூலியசு நெபோசு தல்மாடியாவில் தொடர்ந்து வாழ்ந்து வந்ததைக் குறிப்பிடுகின்றனர்; யூலியசு நெபோசு 480இல் கொலை செய்யப்பட்டான். பின்னால் வந்த ஓஸ்ட்ரோகோத்துகள் தங்களை உரோமைப் பேரரசின் வம்சாவளியினராக கருதினர்.
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசின்_இறங்குமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது