கரீம் கனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
'''கரீம் கனி''' இந்திய வமிசாவளியைச் சேர்ந்த ஒரு [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] அரசியல்வாதி. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் இவர் [[மியான்மர்|மியான்மரில்]] [[பா மௌ]] என்பவரின் கீழ் பாராளுமன்றச் செயலாளர் ஒருவராகசெயலாளராக இருந்தார். [[இரண்டாம் உலகப் போர்]]க் காலத்தில், [[சுபாஷ் சந்திர போஸ்|சுபாஷ் சந்திர போஸினால்]] மலாயாவில் நிறுவப்பட்ட [[ஆசாத் ஹிந்த்]] அரசின் அரசுத்துறை அமைச்சராக ஆனார். இவரே "முஸ்லிம் பதிப்பு இல்லம்" என்பதன் முகாமையாளரும், மலாயாவிலிருந்து வெளிவந்த தமிழ் நாளிதழான [[மலாயா நண்பன்]] என்பதன் ஆசிரியரும், "டோன்" என்னும் நாளிதழின் [[மலாயு மொழி]]ப் பதிப்பான ''சினாரான்'' என்பதன் ஆசிரியரும் ஆவார்.

கரீம் கனி இவற்றுடன் நில்லாது [[அனைத்திந்திய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]] என்பதன் தொடர்பையும், [[அகில மலாயா முஸ்லிம் பரப்புச் சங்கம்]] (AMMMS) என்பதன் தலைமைத்துவத்தையும், இன்னும் பல அமைப்புக்களின் நிறைவேற்றுக் குழுவிலும் இருந்தார். இரண்டாம் உலகப் போரின் பின்னர், இவர் தென்கிழக்காசிய முஸ்லிம் அரசியலில் ஈடுபட்டார். இவரது செயற்பாடுகளில் 1950 இல் சிங்கப்பூரில் இடம் பெற்ற [[மாரியா எருட்டோகு கலவரங்கள்]] குறிப்பிடத் தக்கவை.
 
==பர்மாவில் இவரது செயற்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கரீம்_கனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது