கே. வி. சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
கே. வி. சௌந்தரராஜன் ('''Kodayanallur Vadamamalachery Soundararajan''') (பிறப்பு: 17 பிப்ரவரி 1925) [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] கண்காணிப்பு அகழாய்வாளராக, சென்னை வட்டத்தில் பணிபுரிந்தவர்.<ref>[https://asichennai.gov.in/excavations.html Excavations carried out from 1950 to 2011 by Chennai Circle, Archaeologyy]</ref> பின்னர் இணை தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இவர் 1940 மற்றும் 1950களில் [[மோர்டிமர் வீலர்]] மற்றும் [[வி. டி. கிருஷ்ணசாமி]] ஆகியோர்களுடன் இணைந்து [[தென்னிந்தியா]]வில் [[கற்காலம்]] மற்றும் [[பெருங்கற்காலம்|பெருங்கற்காலத்திய]] தொல்லியல் இடங்களை அகழாய்வு செய்தமைக்கு அறியப்படுகிறார்.
 
இவர் அகழாய்வு செய்த இடங்களில் குறிப்பிட்டத்தக்கவைகள்: சானூர், [[செங்கல்பட்டு]] (1950), [[குன்றத்தூர்]] (காஞ்சிபுரம் மாவட்டம்) (1955–56), [[பேரூர்]], (கோவை மாவட்டம்) (1970–71, 1973–74) ஆகும். மேலும் இவர் கடலில் மூழ்கிய [[காவிரிப்பூம்பட்டினம்]] நகரத்தை 1970களில் அகழாய்வு செய்தார். 1990-ஆம் ஆண்டில் [[அயோத்தி]]யில் உள்ள [[பாபர் மசூதி]] வளாகத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிக்குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது