கே. என். தீட்சித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''காசிநாத் நாராயணன் தீட்சித்''' ('''Kashinath Narayan Dikshit''') (21 அக்டோபர் 1889 – 12 ஆகஸ்டு 1946) [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] தலைமை இயக்குநராக 21 மார்ச் 1937 முதல் 1944-ஆம் ஆண்டு வரை ([[மோர்டிமர் வீலர்|மோர்டிமர் வீலருக்கு]] முன்னர்) பணியாற்றியவர்.
தற்கால [[மகாராட்டிரா]] மாநிலம், [[சோலாப்பூர் மாவட்டம்]], [[பண்டரிபுரம்]] ஊரில் [[பிராமணர்]] குடும்பத்தில் பிறந்த தீட்சித், இந்தியத் தொல்லியல் ஆய்வ்கத்தில் சேரும் முன்னர் [[இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா|கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின்]] கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். பின்னர் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் [[கல்வெட்டியல்]] துறையின் துணை இயக்குநர் பதவி உயர்த்தப்பட்டார். இவர் 1937-இல் [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி]] நாகரிகத்தின் [[மொகஞ்சதாரோ]] தொல்லியல் களத்தில் [[ஜான் மார்ஷல் (தொல்பொருள் ஆய்வாளர்)|ஜான் மார்சலுடன்]] பணியாற்றினார். 1937-இல் தீட்சித் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநரானார். இவர் 1940-1944-ஆம் ஆண்டுகளில் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் [[அகிச்சத்ரா]] தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தார். 1944-இல் பணி ஓய்வு பெற்ற பின்னர் இப்பணியை [[மோர்டிமர் வீலர்]] முடித்தார்.
==இதனையும் காண்க==
* [[அகிச்சத்ரா]]
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._என்._தீட்சித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது