சரபேந்திர பூபாலக் குறவஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 10:
== அமைப்பு ==
இடையிடையே விருத்தம், அகவல், வெண்பா முதலிய செய்யுட்களையும், வசனத்தையும் கொண்டு கீர்த்தன வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. எளிய நடையில் அமைந்த இந்நாடகம் [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்|தஞ்சைப் பெரிய கோயிலில்]] நடைபெற்ற திருவிழாக் காலங்களில் ஆடப்பெற்று வந்ததால், இஃது ”அஷ்டக்கொடிக் குறவஞ்சி” என்றும் அழைக்கப்படுகிறது.<ref name="manimaaran" />
 
நூலின் முதற் பகுதியில் சிறப்புப் பாயிரம், காப்புச் செய்யுள், கட்டியக்காரன் வருகை, கணபதி வருகை ஆகியன இடம்பெறுகின்றன.
 
பின்னர், பாட்டுடைத் தலைவராகிய சரபேந்திரர் உலா வருகின்றார். அவ்வுலாவைப் பந்து விளையாடிக் கொண்டிருந்த மதனவல்லி என்ற பெண் பார்க்கிறாள். தலைவர் மேல் காதல் கொள்கிறாள். உலா மதனவல்லியைக் கடந்து செல்கின்றது. மதனவல்லி காதல் துன்பத்தால் வருந்துகின்றாள். தன் காதலைத் தெரிவித்துத் தலைவனிடம் தோழியைத் தூது அனுப்புகின்றாள். அப்போது குறத்தி வருகின்றாள். குறத்தியை அழைத்துத் தலைவி குறி கேட்கின்றாள். அப்போது குறத்தியைத் தேடி அவள் கணவன் ஆகிய சிங்கன் என்பவன் வருகின்றான். அவன் குறத்தியைக் காணாது வருந்துகின்றான். இறுதியில் குறத்தியைத் தேடிக் கண்டுபிடிக்கின்றான். மகிழ்ச்சி அடைகின்றான். இறுதியில் மங்களம் என்ற பகுதி இடம்பெறுகின்றது.
 
== சிறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சரபேந்திர_பூபாலக்_குறவஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது