ஆரணி அரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox geographical indication | name = ஆரணி அரிசி | image =thumb|ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள ஒரு நெல் வயல் | image_size = | caption = | description = அரிசி வகைகள் | type = விவச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit Disambiguation links
(வேறுபாடு ஏதுமில்லை)

11:19, 13 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

ஆரணி அரிசி (Arani Rice) என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு பொருளாகும்.

ஆரணி அரிசி
ஆரணி - திருவண்ணாமலை சாலையிலுள்ள ஒரு நெல் வயல்
குறிப்புஅரிசி வகைகள்
வகைவிவசாயம்
இடம்ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
நாடுஇந்தியா
பொருள்அரிசி

ஆரணி நகரம் அரிசி, விவசாய மற்றும் நெசவு பட்டுக்கு போன்றவைக்கு புகழ்பெற்ற ஊராகும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக முக்கிய பங்களிப்புவருவாய் நகரம் ஆகும்.இங்கு 250க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. மாநில அளவில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தான் முதல் நகரம் ஆகும்.[1].ஆரணி அரிசி (Arni Rice) என்பது இந்திய[1]நாட்டில் உள்ள தமிழ் நாட்டைச் சேர்த்த ஓர் நகரமான ஆரணியில் தயாரிக்கப்படும் தரமான அரிசி ஆகும்.[2] இந் நகரில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன. மேலும் இந் நகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மற்றும் அண்டை நாடுகளுக்கும் இவ்வரிசி விற்பனைக்கு செல்கிறது.[3] இவை தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் நெல் வகைகள் இங்கிருக்கும் அரிசி ஆலைகளில் அரைக்கப்படுகிறது.

ஆரணி பகுதியில் விளையும் நெல்லுக்கு நீராதாரமாக விளங்குவது செய்யாறு ஆறும், கமண்டல நாகநதி ஆறும் ஆகும். இவ்விரு நதிகளும் ஜவ்வாது மலையில் உற்பத்தி ஆகி ஆரணி அருகே செல்கிறது. இந்த ஆற்றுப்படுகையில் விளைவிக்கப்படும் நெல்லுக்கு கிடைக்கும் நீர் ஜவ்வாது மலையிலுள்ள காடுகளிலும், கனிமவளங்களிலிருந்தும் நுண் ஊட்டச் சத்துகள் கொண்டு வருவதும் ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது.இந்தப் பகுதியில் கிடைக்கும் நன்னீரில் அரிசி வேகவைக்கப்படுவதால் தமிழகத்தில் எங்கிருந்து நெல்லைப் பெற்றாலும் சுவை கூடி விடுகிறது என்பது தான் ஆரணி அரிசியின் சிறப்பு. எனவேதான் சென்னை போன்ற பெருநகரங்களில் எங்கு கிடைக்கும் ஆரணி அரிசி என்று விளம்பரப்படுத்துகின்றன.[2]

கடந்த ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசி முக்கிய பங்கு வகித்துள்ளது. அரிசி உற்பத்தியில் ஆரணி அரிசியானது தஞ்சாவூர் அரிசியை பின் தள்ளியுள்ளது.தற்போது தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் தான் முன்னனியில் உள்ளது.அரிசி உற்பத்தியில் முன்னணி பெற்றதால் ஆரணி அரிசிக்கு ஜிம் விருதும் மற்றும் தேசிய அளவில் தேசிய விருதும் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[3]

  1. அரிசி உற்பத்தியில் தமிழ்நாட்டில் ஆரணி முதலிடம்
  2. ஆரணி அரிசியின் சிறப்புகள்
  3. பல சிறப்புகள் பெற்ற ஆரணி அரிசிக்கு தேசிய விருது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_அரிசி&oldid=3297773" இலிருந்து மீள்விக்கப்பட்டது